17. 80 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மனோதங்கராஜ்
![]()
கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளம் ஆற்றுவரம்பு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான
கக்கோட்டுதலை – தலக்குளம் ஊராட்சிகளை இணைக்கும் உயர்மட்ட பாலம் ரூ. 2.65 கோடி திட்டமதிப்பில் கட்டிமுடிக்கப்பட்டது. பாலத்தை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் திறந்து வைத்தார். அதுபோல் குமரி மாவட்டம் கோவளம் மற்றும் பெரியநாயகி ஆகிய பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைக்கும் பணியினை ரூபாய் 17.80 கோடி திட்டமதிப்பிலான பணியினை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் அவர்கள், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

