எஸ்.டி.பி.ஐ கட்சியின் பொறுப்பாளர்கள் நியமனம்.
![]()
எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்..!
ஈரோடு நவம்பர் 25
1)தெற்கு மாவட்ட தலைவராக அ.சாகுல் ஹமீது

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவராக அ.சாகுல் ஹமீது
மற்றும் மாவட்ட பொதுச்செயலாளராக க.முனாப் ஆகியோர் நியமனம்

செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் சமூக, அரசியல் பணிகள் சிறக்க
வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, கட்சியின் நிர்வாகிகள்,
செயல்வீரர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்
என தெரிவித்துள்ளார்.
அறிவிப்பை தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநில செயற்குழு உறுப்பினரும் கோவை மண்டல தலைவருமான M.E.அப்துல் ஹக்கீம் மற்றும் மண்டல செயலாளர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி உரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் குறிஞ்சி.பாஷா, மாவட்ட பொருளாளர் H.முகமது ஜாபீர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.S.முகமது மன்சூர், ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் மு.ஜமால்தீன், ஈரோடு மேற்கு தொகுதி தலைவர் S.மன்சூர், செயலாளர் ராஜா (எ) J.ஷேக் பாஷா, பவானி தொகுதி தலைவர் J.ஜாஹிர் உசேன், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் M.சகிலா பானு, செயலாளர் A.ரசீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

