மேலகரமனூர் கிராமசாலை 2 கி.மீட்டர் சேதம்

Loading

ஊத்துக்கோட்டை – மேலகரமனூர் கிராமத்திற்கு 2 கி.மீட்டர் சாலை மற்றும் வயலூர் முதல் சூரகாபுரம் வரை 3கி.மீட்டர் தூரத்திற்கு சீரமைக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மாவட்ட ஆட்சியரிடம் புகார் :
திருவள்ளூர் நவ 24 : வடகிழக்கு பருவமழையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பூண்டி,  கடம்பத்தூர் ஒன்றியங்களில் உள்ள பாதிப்புகளை சீரமைக்க  வலியுறுத்தியும்,  திருவள்ளூர் நகராட்சி நேதாஜி சாலையில் மேடாகவும் தாழ்வாகவும் பொது மக்களுக்கு இடைஞ்சலாக மழைநீர் கால்வாய் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தி முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
மேலும் பூண்டி ஒன்றியம் மேலகரமனூர் முதல் ஊத்துக்கோட்டை வரை  2 கி.மீட்டர் சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,  பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட சாலைகள் சேதமடைந்ததை சீரமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.  அதே போல் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட  வயலூர் முதல் சூரகாபுரம் வரை 3கி.மீட்டர் தூரத்திற்கு சீரமைக்க வலியுறுத்தியும், வடகிழக்கு பருவ மழையால் தற்போது சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தார்.  அப்போது, ஒன்றிய செயலாளர்கள் ராமஞ்சேரி எஸ்.மாதவன், சூரகாபுரம் சுதாகர் மற்றும் பூண்டி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் வெங்கட்ரமணா, மாவட்ட மாணவரணி செயலாளர் பி.வி.பாலாஜி, நகர செயலாளர் கந்தசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.
0Shares