சர்வதேச அளவில் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை
![]()
கோவை
கோவை, ஜெம் மருத்துவமனை சார்ப்பாக, கோவை நீலாம்பூர் பகுதியில் சர்வதேச அளவிலான லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை கருத்தரங்கம் நடைபெற்றது இதனை தொடர்ந்து
ஜெம் புற்றுநோய் மையத்தில் பிரத்தியேக தொராசிக் அறுவை சிகிச்சைத் துறை துவங்கப்பட்டுள்ளது
லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை முறையில் முன்னோடியாக திகழும் கோவை ஜெம் மருத்துவமனை சார்பாக, கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் அரங்கில், நவம்பர் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை, 4 நாள் சர்வதேச அளவிலான ‘லேப்ரோசர்ஜ்’ எனும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெறும் மிக முக்கியமான அறுவை சிகிச்சை கருத்தரங்கு நிகழ்வுகளில் இது ஒன்றாக கருதப்படுகிற நிலையில், ஜெம் மருத்துவமனை சார்பாக நடத்த படும் இக்கருத்தரங்கின் 10ம் பதிப்பாக அமைந்தது. இந்த நிகழ்விற்கு இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் வருகை புரிந்துள்ளனர். இதில் நேரடி அறுவை சிகிச்சைகள், முக்கிய உரைகள், நேரடிப் பயிற்சி அமர்வுகள் மற்றும் தேசிய, சர்வதேச வல்லுநர்கள் தலைமையிலான குழு-விவாதங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.
மேலும் இந்த கருத்தரங்கில், தாய்வான், மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற 7 நாடுகளில் இருந்து 10 புகழ்பெற்ற சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.
ஜெம் புற்றுநோய் மையத்தில் தொராசிக் அறுவை சிகிச்சைத் துறை துவக்கம்
இந்த நிகழ்வின்போது, ஜெம் புற்றுநோய் மையம் தனது புதிய தொராசிக் அறுவை சிகிச்சை துறையை துவக்கியது. இந்த புது துறையை தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் டாக்டர். அபிஜாத் ஷேத், ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். சி. பழனிவேலு மற்றும் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர். பிரவீண் ராஜ் ஆகியோர் முன்னிலையில் துவக்கிவைத்தார்.
இது நுரையீரல் புற்றுநோய் மற்றும் பல்வேறு தீங்கற்ற தொராசிக் பகுதி நோய்களுக்கான முழுமையான சிகிச்சைக்காக அர்ப்பணிக்கப்பட்ட, அதிநவீனப் பிரிவாகும். மார்பு மற்றும் நுரையீரல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு நவீன, பல்துறை சிகிச்சையை வழங்குவதற்கான சிறந்த மையமாக இது விளங்கும்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். சி. பழனிவேலு மற்றும் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர். பிரவீண் ராஜ் ஆகியோர் பேசுகையில், மார்பக பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க அதற்கான பிரத்தியேக சிகிச்சை முறைகளின் அவசியத்தை பற்றி பகிர்ந்துகொண்டனர். அவர்கள் தொடர்ந்து பேசுகையில், எம்.ஐ.எஸ். என்று சொல்லப்படும் குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சைத் துறையை மேம்படுத்துவதற்காக புதுமை, பயிற்சி மற்றும் நெறிமுறை மருத்துவ நடைமுறையை இணைக்கும் ஜெம் மருத்துவமனையின் தொலைநோக்குப் பார்வையை பற்றி பகிர்ந்தனர்

