ஈங்கூரில் சர்தார் வல்லபாய்படேல்150வது பிறந்தநாள்
![]()
ஈரோடு
ஈரோடு மாவட்டம் ஈங்கூரில் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் E k பாரத் சார்பில் தேசிய ஒற்றுமை தினப் பேரணி நடைபெற்றது. இதில் இந்துஸ்தான் கல்லூரி மாணவ-மாணவிகள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா மற்றும் கல்லூரி முதல்வர் ரமேஷ்குமார் பேரணியைத் தொடங்கி வைத்தனர். கரகாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளுடன், தேச ஒற்றுமைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

