ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர்கல்லூரி பட்டமளிப்பு விழா

Loading

கோவை
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில், உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளங்கலை மற்றும் முதுகலை பாட பிரிவுகளில் 503 மாணவிகள் பட்டங்களை பெற்றனர். 
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 31ஆவது பட்டமளிப்பு
விழா நடைபெற்றது. இதில், பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஆர்.ராஜவவல்
 சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகள் மத்தியில் கூறியதாவது..
நாட்டின்
எதிர்காலம் இளைய தலைமுறை சிந்திக்க தூண்டுவதோடு சமூகத்தில்
நிலவும், சிக்கல்களுக்கு தீர்வு காணவும், உயர்கல்வி மற்றும்
ஆய்வுகளில் மாணவிகள் ஆர்வத்துடன் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றார். கல்வி
என்பது நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் பயன் தரும் வகையில் செயல்பட
வவண்டும் என்று கூறினார். மேலும்  தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு உதவி செய்யும்
திட்டங்கள் பற்றி எடுத்துரைத்து கல்வி சிறகுகளால் மாணவிகள்
வலம் வர வேண்டும் என்று வாழ்த்தினார். இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின்  நிர்வாக
அறங்காவைர்  சுந்தர் ராமகிருஷ்ணன்,  தலைமை  தாங்கி மாணவர்கள் மத்தியில் கூறியதாவது..
மாணவிகளின் தொடர்  உழைப்பின் காரணமாக இன்று பெற்றுள்ள இந்த பட்டம் இனி வரும் காலங்களில்  உங்களின் வளர்ச்சிக்கு உதவும் என்றார். இந்த நிகழ்ச்சியில்
2 தங்கப்பதக்கம்
உட்பட பல்கலைக்கழக அளவில் 13 சிறப்பிடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு அதற்கான சான்றிதழ்களுடன், இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 503 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் தொடர்ந்து அனைவரையும் கல்லூரியின்  முதல்வர் கி.சித்ரா நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.
0Shares