முதலமைச்சர் ரங்கசாமி பூங்காவை திறந்து வைத்தார்
![]()
புதுச்சேரி அக்-25
புதுச்சேரி புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா- முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். சபாநாயகர் செல்வம், அனிபால் கென்னடி எம்எல்ஏ பங்கேற்பு

புதுச்சேரி புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்காவை இன்று மதியம் புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்கள் திறந்து வைத்தார்.
இரண்டு ஆண்டுகள் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதன் பின்னர், புதுச்சேரி மக்களும் சுற்றுலா பயணிகளும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தாவரவியல் பூங்கா தற்போது முழுமையான புதுப்பிக்கப்பட்ட வடிவில் திறக்கப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்காவில் பல்வேறு மேம்படுத்தப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் நுழைவு வாயில் புதுப்பித்தல், டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் கழிப்பறைகள் புனரமைத்தல், ஜாக்கிங் டிராக் அமைத்தல், கண்ணாடி மாளிகை மற்றும் தியேட்டர் புதுப்பித்தல், செல்பி பாயிண்ட், வரைபடத்துடன் கூடிய சைகைப் பலகைகள், சிறுவர்களுக்கான நவீன பேட்டரி ரயில், மூத்த குடி மக்களுக்கான பேட்டரி கார் வசதி, பாரம்பரிய பொருட்களுடன் கூடிய குடில்கள் போன்ற பல புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புனரமைப்பு பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இன்றைய திறப்பு விழாவில் சட்ட பேரவை தலைவர் திரு. செல்வம், அமைச்சர் திரு. தேனி ஜெயகுமார், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த புனரமைப்பு மூலம் தாவரவியல் பூங்கா மீண்டும் சுற்றுலா பயணிகளின் பிரியமான இடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

