சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.. பூமி பூஜை செய்த எம்எல்ஏ அனிபால் கென்னடி!
![]()
புதுச்சேரி உப்பளம் தொகுதி சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் எம்எல்ஏ அனிபால் கென்னடி பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அவ்வை நகர் சந்திப்பிலிருந்து துறைமுக சாலை சந்திப்பு வரையிலான உடையார்தோட்டம் பிரதான சாலைக்கு ‘L’ வடிவ வாய்க்கால் வசதிகளுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது.
இப்பணிகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2023-24) கீழ் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. ஒப்பந்தக்காலம் நான்கு மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகம், ஆய்வாளர் ரவிச்சந்திரன், தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் இருதயராஜ், ராகேஷ் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

