இரு சமுதாய பிரச்சனை.. MLA தீர்வு காண வேண்டும்..மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்!

Loading

காலாப்பட்டு பகுதியில் இரு சமுதாய பிரச்சனையாக உருவெடுத்துள்ள கோவில் பிரச்சனையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என காலாப்பட்டு தொகுதி புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது .

இதுகுறித்து புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக காலாப்பட்டு தொகுதி பொறுப்பாளர் ஆ.குமார் நிர்வாகிகள் ஆனந்தன், சேகர், வாசுதேவன், ஆகியோர் கூட்டாக செய்தியாளரிடம் கூறியதாவது,

புதுச்சேரி பெரியகாலாப்பட்டு ஸ்ரீ செங்கழுநீர் அம்மன் கோவில் பிரச்சனை இரு சமுதாய மக்களிடையே கடந்த இரண்டு நாட்களாக அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. சொத்துக்கள் உள்ள கோவில் பெயரில் புதிய கோவில் கட்டியது மற்றும் இந்த கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகள் அகற்ற நீதிமன்ற தீர்ப்பு விவகாரம் குறித்தும், நடவடிக்கை இல்லை என்று கூறி ஒரு தரப்பினர் கடந்த மாதம் நான்கு மணி நேரம் இசிஆர் மறியல் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் காரணமாக இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் கும்பாபிஷேகம் மற்றும் மண்டல பூஜையை இருதரப்பினரும் தலா 24 நாட்கள் பிரித்து நடத்த பேச்சுவார்த்தையில் முடிவு செயப்பட்டது. இதன்படி மண்டல பூஜையை ஒரு தரப்பினர் முடித்து எதிர் தரப்பினருக்கு கொடுக்காமல் கோவிலை பூட்டியது யாருடைய கட்டளையின் பேரில் நடந்தது. இதன் காரணமாக காலாபட்டில் கடந்த இரண்டு நாட்களாக இரு சமுதாய மக்களிடையே பதற்றத்தையும் ஒருவித அசாதாரண சூழ்நிலை உருவாகி காலாப்பட்டு காவல் நிலையத்தில் இரண்டு சமுதாய மக்களும் கூட்டாக மாறி மாறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக நடந்து வரும் இந்த கோவில் பிரச்சனையை தொகுதியில் ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் தீர்க்காதது ஏன் ? இந்த விஷயத்தில் சட்டமன்ற உறுப்பினரின் நிலைப்பாடு என்ன? என்பதை இப்பகுதி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
காலாப்பட்டு சாசன் கம்பெனி கழிவு நீர் குழாய் விவகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடலில் உள்ள குழாய்களை மூன்று மாதத்தில் வெளியே எடுக்க உத்தரவிட்டும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தவில்லை. வலை பாதித்து வழக்கு தொடுத்த மீனவருக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை வலைபாய்த்த மீனவர்கள் கம்பெனி வாசலிலே போராட்டம் நடத்தியுள்ளனர்.

காலாப்பட்டு கோவில் இடம் ஆக்கிரமிப்பு அகற்றுவது மற்றும் சாசன் கம்பெனி கடலில் உள்ள கழிவுநீர் குழாய் அகற்றுவது குறித்து நீதிமன்ற உத்தரவை புதுச்சேரி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்படுத்துவதில்லை, மதிப்பதில்லை, இந்த விஷயங்களை கையில் எடுத்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இப்பகுதி மக்களுக்கு நீதி வழங்குவாரா?

காலாப்பட்டு பகுதியில் இரு சமுதாய மக்கள் பிரச்சனையாக உருவெடுத்துள்ள கோவில் பிரச்சனையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் இவரோடு எதிர் அணியில் 2026 தேர்தலில் போட்டியிட ஆயத்தமாக உள்ள எதிரணி வேட்பாளர்களும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க முடியாதவர்களுக்கு மக்கள் எப்படி வாக்களிப்பார்கள். வாக்குக்கு பணம் கொடுத்து, காலண்டர் கொடுத்து, சேலை, சக்கரை கொடுத்து, ஓட்டு வாங்கி விடலாம் என்று எண்ணுகிறார்களா? இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0Shares