தாலுகா அலுவலகம் முற்றுகை… ஆண்டிபட்டியில் பரபரப்பு!
பஞ்சமர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்ய வலியுறுத்தி ஆண்டிபட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
பஞ்சமர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை காலி செய்ய வலியுறுத்தியும், வீடு இல்லாத ஏழை எளிய ஜனங்களுக்கு வீடு கட்ட நிலங்களை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் ,இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால் தலைமையில் ஊர்வலமாக வந்து தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர் .
இதில் ஏராளமான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு ஊர்வலத்தில் பஞ்சமர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களை உடனடியாக ஆக்கிரமிப்பை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் இது குறித்தான விளம்பர பலகையை தாலுகா அலுவலகத்தில் வைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பி வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சார் ஆட்சியர் ஆகியோரிடமும், தாசில்தார் அவர்களிடமும் பலமுறை மனு கொடுத்தும்,இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ,தொடர்ந்து இதே நிலை நீடித்தால் போராட்டத்தை தீவிர படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று மாவட்ட செயலாளர் கோபால் தெரிவித்தார்.