கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை..அரசுக்கு உரைக்க சொன்ன தமிழரசி!

Loading

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி செல்லும் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை அகற்றக்கோரி தமிழர் விடுதலைக் கழகம் நிறுவனத் தலைவர் தமிழரசி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் தலைமை ஏற்று நடத்திய தலித்ராயன் கூறும்பொழுது:
இந்த மதுபான கடை பெரியகுளம் வடுகபட்டி செல்லும் பிரதான வழியில் அமைந்துள்ளதால் மது அருந்திவிட்டு சாலையில் செல்லும் பொழுது வாகனம் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்துள்ளார்கள்

இத்தகைய பாதுகாப்பு இல்லாத மதுபான கடையை ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் வைத்துக் கொண்டால் சாலை போக்குவரத்திற்கும் சாலையில் பயணிக்கும் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்தவித இடையூறு ஏற்படாது. மேலும் இந்த மதுபான கடையில் அதிகாலை முதலே கள்ள மார்க்கெட்டில் மதுகள் விற்பனை செய்யப்படுவதால் அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு வேலைக்குச் செல்லும் நபர்கள் மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்து வருகின்றனர். இத்தகைய சம்பவத்தால் ஏழை எளிய விவசாயிகள் பெரும் அளவில் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதனை அரசு கருத்தில் கொண்டு உடனடியாக இந்த மதுபான கடையை மாற்றி அமைக்க வேண்டும் என்ன வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த வருவாய் துஏற்பட்டதுறை மற்றும் தென்கரை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர் இந்தப் போராட்டம் தொடர்பாக அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0Shares