இந்தியா ஒரு பெரிய சக்தி : டிரம்புக்கு மேலும் ஒரு பொருளாதார நிபுணர் எதிர்ப்பு!

Loading

இந்தியா உலகில் ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு பெரிய சக்தி. டிரம்ப் வரிகளில் செய்யும் அனைத்தும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று டிரம்புக்கு மேலும் ஒரு பொருளாதார நிபுணர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார், அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார் ,குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார் ,அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார் ,இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.

இந்தநிலையில் இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உள்ளார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும் டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.குறிப்பாக பொருளாதார நிபுணர்கள் தாக்களுடைய கருத்துக்களை தெரிவித்து எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் அமெரிக்காவின் மூத்த பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே மற்றும் டிரம்பின் முன்னாள் உதவியாளர் ஜான் போல்டன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரபல பொருளாதார நிபுணர் ஜெப்ரி சாக்ஸ் கூறியதாவது:-அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. சீனாவுக்கு எதிரான குழுவில் அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியா நீண்டகால பாதுகாப்பை அறுவடை செய்ய முடியாது. தயவுசெய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தியா உலகில் ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு பெரிய சக்தி. டிரம்ப் வரிகளில் செய்யும் அனைத்தும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என கூறியுள்ளார் .

0Shares