நவீன முறை சலவையகம் அமைக்க நிதி உதவி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களை மேம்படுத்துவதற்காக 5 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து நவீன முறை சலவையகங்கள் அமைத்தல் திட்டம் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் மாவட்ட தேர்வுக் குழு மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற குறைந்த பட்சம் வயது வரம்பு 20,குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் பயிற்சி பெற்ற நபர்கள் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கலாம். குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1,00,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

5 நபர்கள் கொண்ட குழுவாக அமைத்து செயல்படுத்த வேண்டும். உபகரணங்கள் வழங்கப்படும் துணி துவைக்கும் இயந்திரத்தின் கொள்ளளவு 50 கிலோ ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.நவீன சலவையகம் அமைக்க வழங்கப்படும் தொகையை ரூ.5,00,000 ஆக உயர்த்தி 15 குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.உபகரணங்கள் வழங்கப்படும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.

இத்திட்டத்தில் விருப்பம் உள்ளவர்கள், உரிய விண்ணப்ப படிவத்தினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தரை தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று, அதனை பூர்த்தி செய்து, உரிய சான்று மற்றும் ஆவணங்களின் நகல்கள் இணைத்து சமர்ப்பிக்கும்படி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

0Shares