லைசென்ஸ் கட்டாயம் என்ற உத்தரவு தற்காலிகமாக ரத்து!
![]()
தமிழக அரசு கிராமப்புறங்களில் தொழில் செய்ய விரும்பும் அனைவரும் (டீக்கடை முதல் சிறு தொழில் வரை) கட்டாயம் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் பின்னர், அந்த உத்தரவு தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெளியான உத்தரவின்படி, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் தொழில் நடத்த லைசென்ஸ் கட்டாயமாக்கப்பட்டது.இது சிறு வணிகர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதை கண்டித்து, இதனால் ஏழை வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறினார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியதாவது:இத்தகைய லைசென்ஸ் முறைகள் பல ஆண்டுகளாக இருந்தாலும், ஒழுங்கமைக்கப்பட்ட விதிமுறைகள் இல்லாததால் ஊராட்சிகளின் மனப்பான்மையைப் பொறுத்து கட்டணங்களில் வெகுவேறு இருந்தது.
இதை ஒரே மாதிரியில் கொண்டுவர புதிய விதிகள் தயாரிக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டது.இந்த விதிகள் வணிகர்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டவை என்றும், ஏழை எளியோருக்கு எதிரான நடவடிக்கையல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழ்நாடுவணிகர்சங்கங்களின்பேரமைப்பின்கோரிக்கையின்அடிப்படையில்,முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், அலுவலர்களும்.வணிகர் சங்க பிரதிநிதிகளும் இணைந்தஆலோசனை குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
கிராமங்களில் சிறு வணிகர்களுக்கான லைசென்ஸ் நடைமுறையை எளிமைப்படுத்தும் வழிகளை பரிசீலிக்கிறது.அதன் பரிந்துரையை வைத்தே அரசு இறுதித் தீர்வு எடுக்கும் என்று கூறியது.
இந்தநிலையில் கிராமப்புறங்களில் தொழில் செய்ய விரும்பும் சிறு வணிகர்களுக்கு லைசென்ஸ் கட்டாயம் என்ற உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. புதிய நடைமுறை குறித்த ஆலோசனைகள் முடிவுக்கு வந்த பிறகு, அரசு இறுதியான முடிவை அறிவித்துள்ளது.

