கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் போராட்டம்!

Loading

வேலூரில் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பினர் பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கோரிக்கை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வேலூர் மாவட்டம் ஜேக்டோ-ஜியோ பேரமைப்பின் சார்பில் தேர்தல் காலவாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும்நடைமுறைபடுத்த கோருதல், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறை மீண்டும் வழங்க கோருதல் ஒப்பந்த ஊதியம் மதிப்பூதியம் தினக்கூலி முறையினை இரத்து செய்தும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம ஊழியர்கள் அனைவருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளைநிறைவேற்றிட கோரி கோரிக்கை பேரணியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தினால் அதற்கு மாற்றாக ஆர்ப்பாட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி,எம்.ஜெயகாந்தன், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.சினேகலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் பெருமாள் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.மாநிலஉயர்மட்டக்குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200 பெண்கள் உட்பட 500 பேர் பங்கேற்றனர்.

0Shares