மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்கள் கைது!

8 total views , 1 views today

கோவை அருகே மூதாட்டியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டி. தனியாக வசித்து வரும் இவர், கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார். இந்த மூதாட்டியின் வீடு அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அதிகாலையில் மூதாட்டி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 வடமாநில தொழிலாளர்கள் திடீரென அவரை தாக்கி கீழே தள்ளினர். பின்னர் மூதாட்டி என்றும் பாராமல் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கதறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

உடனே அந்த வடமாநில தொழிலாளர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து அக்கம்பக்கத்தினர் பிடித்தனர். ஆனாலும் ஒருவர் தப்பி ஓடினார். மீதமுள்ள 2 பேரை பிடித்து கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.அத்துடன் தப்பி ஓடிய நபரையும் போலீசார் தேடிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

0Shares