“கிரைம் கண்ட்ரோல் சமிதி ” மாநில தலைவராக அக்பர் அலி நியமனம்.!

Loading

ஈரோடு , க்ரைம் கண்ட்ரோல் ஸமிதி மாநில தலைவராக ஈரோட்டைச் சேர்ந்த அக்பர் அலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மனித உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாப்பது, வாழ்க்கையை கவனமாக வாழ வேண்டும் பொதுமக்களுக்கு அவர்களின் சொந்த பாதுகாப்பிற்காக கல்வி கற்பித்தல், பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையே உள்ள தூரத்தை நீக்குதல், குற்றவாளியை விசாரித்து கைது செய்வதில் காவல் துறைக்கு உதவுதல் மற்றும்விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஒவ்வொருவர் மனதில் தேசிய ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துதல், பிரிவினைவாத மற்றும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராடுதல், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது க்ரைம் கண்ட்ரோல் சமிதி,

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் க்ரைம் கண்ட்ரோல் சமிதி செயல்பட்டு வருகிறது. இது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த க்ரைம் கண்ட்ரோல் சமிதி டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு இயங்குகிறது. தற்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர் அலிக்கு தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கிரைம் கண்ட்ரோல் சம்மதி தமிழ்நாடு மாநில தலைவர் அக்பர் அலி, டெல்லியில் நேரடியாக சென்று தேசிய தலைவர் ஐ.சி.ஜெயின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்று தமிழ்நாடு மாநில தலைவருக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டார்.

0Shares