விழுப்புரத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஆற்று திருவிழா

Loading

விழுப்புரம்
விழுப்புரத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஆற்று திருவிழா – அலைமோதிய மக்கள் கூட்டம்
விழுப்புரம் மாவட்டத்தில் 24 இடங்களில் நடைபெற்று வரும் ஆற்றுத் திருவிழாவையொட்டி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கபட்டது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா கடந்த 13 ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது. பொங்கல்,காணும்
பொங்கல் , மாட்டுபொங்கல்,  தொடர்ந்து 5-வது நாளான . இன்று ஆயிரக்கணக்கான மக்கள் திராளக பங்கேற்று பல்வேறு கோயில்களில் இருந்து வந்த சாமிகளை ஆற்று நீரில் தீர்த்தவாரி செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்ததை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இன்று ஆற்றுத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தென் பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, பம்பை ஆறு, வராக நதி ஆறு உள்ளிட்ட ஆறுகள் செல்லும் இடங்களில் , எல்லீஸ் சத்திரம், ஏனாதிமங்கலம்,
, கள்ளிப்பட்டு, பிடாகம், பில்லூர், அகரம், சித்தாமூர், அய்யூர் அகரம், அரகண்டநல்லூர், வீடூர், விக்கிரவாண்டி, குயிலாப் பாளையம் உள்ளிட்ட 24 இடங்களில் இந்த ஆற்றுத்திருவிழா நடக்கிறது.நடைபெற்று வரும் இந்த ஆற்று திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்தும் மாட்டு வண்டி, டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் ஆற்று படுகைக்கு விநாயகர், முருகர், சிவன், பார்வதி, பெருமாள், காளி உள்ளிட்ட பல்வேறு சுவாமிகள் அழைத்து வரப்பட்டு அங்குள்ள ஆற்று நீரில் தீர்த்தவாரி செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.இதனை தொடர்ந்து
 ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் விற்கப்பட்ட விதவிதமான
பொருட்களை வாங்கியும், ராட்சத ஊஞ்சல், ரங்கராட்டினம் உள்ளிட்ட பொழுதுப்போக்கு விளையாட்டுக்களில் ஈடுபட்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் ஆற்று திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக எல்லீஸ் சத்திரம், ஏனாதிமங்கலம் , கள்ளிப்பட்டு, பிடாகம் ஆகிய இடங்களில் உள்ள தென்பெண்ணையாறுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் மக்கள் கூட்டத்தால் தென்பெண்ணையாறு நிரம்பி வழிந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்று திருவிழா  நடைபெற்றது.
0Shares