டாக்டர் ஜோ பல் மருத்துவமனை இரண்டாவது கிளை துவக்க விழா
டாக்டர் ஜோ பல் மருத்துவமனை இரண்டாவது கிளை துவக்க விழா
மதுரை அழகர் கோயில் ரோடு அப்பன் திருப்பதியில் அமைந்துள்ள டாக்டர் ஜோ பல் மருத்துவமனையின், இரண்டாவது கிளை துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர். ஜோ டேனி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், எங்கள் மருத்துவமனையில் பல் பிரித்தெடுத்தல், வேர் சிகிச்சை, பல் சுத்தம் செய்தல், பல் எக்ஸ்-ரே, பற்குழி நிரப்புதல் போன்ற சேவைகள் வழங்குகிறோம். திறப்பு விழாவை முன்னிட்டு ஒரு வருட மருத்துவ ஆலோசனை மற்றும் ஒரு வருட எக்ஸ்ரே உடன் 1-வருடத்திற்க்கான மெம்பர்ஷிப் ரூபாய் 249/- மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளோம். மேலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக 30 நாட்களுக்கு பல் சார்ந்த எக்ஸ்ரே சேவையை இலவசமாக வழங்குகிறோம் என தெரிவித்தார். உடன் சிறப்பு விருந்தினராக மாமன்ற உறுப்பினர் D. சேகர் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். மருத்துவமனை நிர்வாகம் சார்பாக ஜான் பாலசிங் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.