தமிழக அரசின் மக்களை தேடி முதலவன் திட்டம் போல புதுச்சேரி காரைக்காலில் மக்களை தேடி ஆடசியர் திட்டம்.. அசத்துகிறார் கலெக்டர் மணிகண்டன் ஐஏஎஸ்
தமிழக அரசின் மக்களை தேடி முதலவன் திட்டம் போல புதுச்சேரி காரைக்காலில் மக்களை தேடி ஆடசியர் திட்டம்.. அசத்துகிறார் கலெக்டர் மணிகண்டன் ஐஏஎஸ்
காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தால் “மக்களைத் தேடி மாவட்ட ஆட்சியர்” என்ற திட்டம் நிகழ்ச்சி (9.09.2024) காலை காரைக்கால் பகுதியிலுள்ள கொன்னக்காவளி கிராமத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றன.
இதில் கொன்னக்காவளி, கூழ்குடித்த அக்ரஹாரம், புளியந்தோப்பு, கழுகுமேடு சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பொது மக்களின் பொது பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்களின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றன.
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வைத்த கோரிக்கையில் சுத்தமான குடிநீர் வேண்டியும். குடிநீர் பற்றாக்குறை, எரியாத தெரு விளக்குகள் பிரச்சனை, சாலை வசதிகளை, பேருந்து வசதிகளை மேம்படுத்தி தரவும் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்கள்.
மேலும் அடர்ந்து பரவி கிடக்கும் காட்டு கருவைகளை அகற்றி தரும்படியும் குடிநீர் தொட்டியை பழுதுநீக்கி மேம்படுத்தி தரவும் கேட்டுக் கொண்டார்கள்.
அரசு மூலம் இங்குள்ள மாணவர் மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று படிப்பதற்கு வசதியாக மினி பேருந்து வசதி, பாசன வாய்க்கால்களை தூர் வாருதல், உரத்தட்டுப்பாட்டை போக்க வேண்டும், சுற்று வட்டார
கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்தார்கள்.
மேலும் மருதன் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகலை அகற்றி வாய்க்காலை தூர்வாருதல், ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் பல்வேறு வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட தொகுப்பு வீடுகளை பராமரித்து தருதல்
புதிய சமுதாய நலக்கூடம் அமைத்தல், பூவம் எல்லை பகுதியில் சி.சி.டி.வி கேமரா பொருத்தி தருதல் என மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவும் மனுக்கள் மூலமாகவும் கோரிக்கை வைத்தார்கள்.
இந்த கோரிக்கைகளையும் மனுக்களையும் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்கள் அங்கு குழுமியிருந்த பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் பேசுகையில் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும். மேலும் மக்களின் தேவைகள் 40 % சதவீதத்திற்கும் மேல் பணிகள் உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நிறைவேற்றி தரப்படுகிறது என்று தெரிவித்தார்.
மேலும் இங்கு எரியாத தெருவிளக்குகள் அனைத்தும் 15 நாட்களுக்குள் சரி செய்யப்படும் என உடனிருந்த மின்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த முகாமின் மூலம் மத்திய அரசின் நிறுவனமான அலீம்கோ நிருவனத்திற்கு சில தினங்களுக்கு முன்பு காரைக்காலில் இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெறும் இந்த கிராமப்புறங்களில் மக்களை தேடி மாவட்ட ஆட்சியர் முகாமில் சில தினங்களுக்கு முன்பு அவர்கள் ஆய்வு மேற்கொண்டு மூன்று சிறுவர்களுக்கு மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள் வழங்க உள்ளார்கள்.
மேலும் ஜிப்மர் மருத்துவமனையின் மூலம் இன்று முகாம் அமைக்கப்பட்டு இப்பகுதியில் உள்ள அனைவருக்கும் கண் பரிசோதனை செய்து தர மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாமில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் மிஷன் சக்தி என்ற மத்திய அரசின் திட்டத்தின் மூலம் பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் மேலும் “போஷன்மா” திட்டத்தின் மூலம் காய்கறிகள் மற்றும் சத்தான உணவுகள் கண்காட்சியாக பொது மக்களுக்கு வைக்கப்பட்டு இதன் மூலம் கிராமப்புறங்களில் சத்தான உணவுகளின் முக்கியத்துவம் குறித்து இந்த போஷன் மா திட்டத்தின் மூலம் எடுத்துரைக்கப்படும் எனவும் தெரிவித்தார்
. மேலும் தொழில் துறைமூலம் இங்குள்ள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரப்படும்.. தொழில் தொடங்க அரசும் வங்கிகளும் நிதி உதவி அளிக்கதயாராக உள்ளன. அரசாங்கம் அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்,
முகாமில் துணை மாவட்ட ஆட்சியர்கள் திரு. ஜான்சன். செந்தில்நாதன் வெங்கடகிருஷ்ணன் உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் சுபாஷ் குடிமைப் பொருள் வழங்கல் துணை இயக்குனர். சச்சிதானந்தம் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகர் மற்றும் அரசு அதிகாரிகள் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.