தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் எக்ஸ் தள பதிவுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதில்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் எக்ஸ் தள பதிவுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதில்* 

ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் வரவேற்கத்தக்கதாகும்.  இருப்பினும், கவனத்தை ஈர்ப்பதற்காக அரசுகள் ஒன்றையொன்று குறைகூறுவது  அரசியல் சாசன உணர்வுக்கும், ஒன்றுபட்ட இந்தியாவின் மாண்புக்கும் எதிரானதாகிவிடும். விரிவான கலந்தாலோசனைகள் மூலம் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக்கொள்கை (என்இபி) 2020 இந்திய மக்களின் கூட்டான அறிவைப் பெற்றுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கைக்கு உங்களின் “ கொள்கை வழிபட்ட” எதிர்ப்பு  மீது  சில கேள்விகளை நான் எழுப்ப விரும்புகிறேன்.
1. தமிழ் உள்ளிட்ட  தாய் மொழிக் கல்வியை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
2. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தேர்வுகள் நடத்துவதை   நீங்கள் எதிர்க்கிறீர்களா?
3. தமிழ் உள்ளிட்ட  இந்திய மொழிகளில் பாட நூல்கள் மற்றும் உள்ளடக்கம் உருவாக்கத்தை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
4. தேசியக் கல்விக்கொள்கையின் ஒட்டுமொத்த, பலதுறை சார்ந்த, சமமான, எதிர்காலத்திற்குரிய, அனைவரையும் உள்ளடக்கிய  கட்டமைப்பை நீங்கள் எதிர்க்கிறீர்களா?
இல்லையென்றால், உங்களின் அரசியல் ஆதாயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்தவும் உங்களை நான் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
0Shares