வீட்டுவசதித் துறை அமைச்சருக்கு பெயிரா தேசியத் தலைவர் ஆ.ஹென்றி பாராட்டு

Loading

வீட்டுவசதித் துறை அமைச்சருக்கு பெயிரா பாராட்டு..
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு சு.முத்துசாமி அவர்களுக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியை சார்ந்த திரு. M.S.குமார் அவர்கள், நாகர்கோவில் மாநகராட்சியில் அகலம் குறைந்த தெருக்களில் அமைந்துள்ள பூர்வீக மனைகளில் முறையாக அனுமதி பெற்று வீடு கட்ட இயலவில்லை எனவும், இதனால் வங்கிகளில் கடன் பெற்று புதிதாக வீடு கட்ட விரும்பும் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் எனவும், காரணம் தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள் 2019 இல் இதற்கு வழிவகை செய்யவில்லை எனவும், இது சம்பந்தமாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நாகர்கோவில் நகர மன்றத்தில் 08.03.2019 அன்று, நாகர்கோவில் நகரத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் அடர்த்தியான பகுதியை கண்டறிந்து தொடர் கட்டுமான பகுதியாக (CBA) மாற்றம் செய்ய வேண்டும் என தீர்மான எண் – 168/2019, ஆக தீர்மானம் நிறைவேற்றி அதனை நகர் ஊரமைப்பு இயக்குனருக்கு (DTCP) அனுப்பி வைத்தும், இதுவரை எந்த விதமான தீர்வும் ஏற்படவில்லை எனவும், ஆகவே மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகிய தங்களின் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்கண்ட நாகர்கோவில் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என கடந்த 16.04.2023 அன்று எமது Faira கூட்டமைப்பிற்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருந்தார்.
இது சம்பந்தமாக மேற்கண்ட திரு.எம்.எஸ்.குமார் அவர்கள் FAIRA கூட்டமைப்பிற்கு எழுதிய கடிதத்தை மெத்த பணிவோடு தங்களின் மேலான கவனத்திற்கு பரிந்துரைத்து தங்களின் மேலான நடவடிக்கைக்கு கடந்த 17.04.2023 அன்று FAIRA கடித எண். 006/2023 மூலம் தங்களுக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருந்தேன்.
தாங்கள் மேற்கண்ட எமது கூட்டமைப்பின் பரிந்துரை கடிதத்தை கவனத்தில் கொண்டும், மேற்கண்ட திரு எம்.எஸ்.குமார் அவர்கள் எழுதிய கடிதத்தை பரிசீலித்தும், மேலும் நாகர்கோவிலில் அனுமதி பெற்று வீடு கட்ட விரும்பும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும், கடந்த 18.06.2024, அன்று நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் பெருமளவில் வசிக்கும்  மிக அடர்த்தியான பகுதியை கண்டறிந்து அதனை TNCDBR-2019, விதி எண் 30 ( 1 ) இன் கீழ் தொடர் கட்டிட பகுதியாக அறிவித்து, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் ந.வ.4(2) அரசாணை நிலை எண்:117 ஆக வெளியிட்டு நாகர்கோவில் பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் கனவை நினைவாக்கியமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களுக்கும் TNHUD செயலாளர்,DTCP இயக்குனர் அவர்களுக்கும், எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் உளமார்ந்த பாராட்டுக்களையும், இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இதுபோன்று தமிழகம் முழுவதும் இருக்கும் நகரங்களில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் மிக அடர்த்தியான பகுதிகளையும் கண்டறிந்து விரைவில் அதனையும் தொடர் கட்டிட பகுதியாக(CBA)மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டு, உரிய தீர்வு காண வேண்டுமென வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதி உள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *