செய்தி அலசல் குழுமத்திற்கு பெயிரா வாழ்த்து!.
செய்தி அலசல் குழுமத்திற்கு பெயிரா வாழ்த்து!.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், செய்தி அலசல் குழுமத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ஏழைச் சொல் அம்பலம் ஏறாது” என்பார்கள் ஒரு காலத்தில் அதாவது சாதாரண நிலையில் இருப்பவர் சொல்லும் கருத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒருவர் உயர்ந்தால்தான் அவரது சொல்லுக்கும் மரியாதை உயரும் என்ற நிலையை மாற்றி, கடைக்கோடியில் இருக்கிற சாதாரண மக்களின் குரலும் கோட்டைக்கு ஒலிக்கும் என்கிற வகையில், மக்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து கொண்டு, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களின் செய்திகளையும் கூட மிகுந்த கவனமுடன் நுணுக்கமாக சேகரித்து செய்தி அலசல் குழுமம், தமது செய்தி அலசல் தினசரி காலை நாளிதழ், இணையதள தொலைக்காட்சி, யூடியூப் சேனல், பேஸ்புக், twitter, instagram, whatsapp சேனல், டெலிகிராம், ஷேர் சாட் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து தன் நிலை மாறாமல், கொண்ட கொள்கையில் உறுதியுடன் எளிய மக்களின் குரலாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அதன் காரணமாக வெகுமக்களின் பேராதரவை பெற்று, செய்தி அலசல் யூடியூப் சேனல் இதுவரை 1,31,234 எண்ணிக்கையில் சப்ஸ்க்ரைபர்களையும், 7,44,16,192 எண்ணிக்கையில் பார்வையாளர்களையும் பெற்று இருக்கிறது.
இதற்கு மிக முக்கிய காரணமான எனது அருமை நண்பரும், தூக்கத்தை துச்சமென எண்ணி தூக்கி எறிந்து, அல்லும் பகலும் அடித்தட்டு மற்றும் பாட்டாளி மக்களின் அடிப்படைத் தேவைகளைகளையும், அவர்கள் படுகின்ற துன்பங்கள் துயரங்கள் மற்றும் அல்லல்களையும், இன்னல்களையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில், தனது கடமையையும் பொறுப்பையும் உணர்ந்து அயராது உழைத்துக் கொண்டிருக்கும் செய்தி அலசல் ஆசிரியர் எனது அன்பு சகோதரர் திரு.ராஜேந்திரன் அவர்களுக்கும்,
செய்தி அலசல் குழுமத்தின் விசுவாசமிக்க , செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஊழியர்களுக்கும்…
தொடர்ந்து ஆதரவளித்து வரும் பொது மக்களுக்கும், பார்வையாளர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும், விளம்பரதாரர்களுக்கும், சந்தாதாரர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்….
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் எமது உளமார்ந்த பாராட்டுக்களையும், இதயபூர்வமான வாழ்த்துக்களையும்,
நெஞ்சார்ந்த நன்றிகளையும்,
தெரிவித்துக் கொள்கின்றேன்என்று வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்