அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி சிறப்புரையாற்றினார்

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோவை மண்டல பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
18.06.2024 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணி அளவில் கோவை, அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஜென்னிஸ் ரெசிடென்சி ஹோட்டலில் FAIRA கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் திரு P.நேரு நகர் நந்து அவர்களின் தலைமையிலும், தேசிய செயல் செயலாளர் திரு.S.செந்தில்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், தேசிய செயற்குழு தலைவர் திரு.வினோத் சிங் ரத்தோர் அவர்களின் வரவேற்பிலும் தேசிய மற்றும் மாநில பொறுப்பாளர்கள்
தேசிய பொருளாளர் R. சந்திரசேகர்தேசிய தலைமை நிலைய செயலாளர் R . கார்த்திக்
 மாநில செயற்குழு தலைவர் M. கணேசன்மாநில துணைத்தலைவர்கள் K. முரளிதரன்
S. ராமநாதன் மாநில ஆலோசனை குழு தலைவர் P. சியாம் கார்த்திக் மாவட்டத் தலைவர்கள் S. சுரேஷ்குமார் வில்சன் P. தாமஸ்ஆகியோர்களின் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் FAIRA கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தேசிய துணைச் செயலாளர் திரு.கண்ணன் என்கிற பாலசண்முகம் இந்த சிறப்புமிகு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்  நன்றி தெரிவித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…
பதிவுத் துறை குறித்த தீர்மானங்கள்.
பதிவுத்துறையில் பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிற நிலங்களின் மீதான அரசு வழிகாட்டி மதிப்பு குறித்த வரைவு தற்போது பதிவுத்துறை இணையதளத்தில் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது கிராமப்புறங்களில் இருக்கிற பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியாமல் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்த அரசு வழிகாட்டி மதிப்பு உயர்வு குறித்த வரைவு சம்பந்தமான தகவல்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களின் வெளியில் உள்ள தகவல் பலகையில் ஒட்டி, வகைபாடு மதிப்பின் அடிப்படையில் இல்லாமல், தெரு மதிப்பு மற்றும் சர்வே எண் மதிப்பின் அடிப்படையில் நிர்ணயித்து, அதனை அனைத்து பொதுமக்களும் அறியும் வண்ணம் புதிய வழிகாட்டி மதிப்பு வரைவினை வெளியிட வேண்டுகிறோம்.
ரியல் எஸ்டேட் தொழிலுக்கு ஆதாரமாக விளங்கும் பொது அதிகார ஆவணத்திற்கு விண்ணை முட்டும் முத்திரைத் தீர்வை கட்டணம் ஒரு சதவீதம் மற்றும் கண்ணை கட்டும் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் என்ற கட்டணத்தை திரும்பப் பெற்று, முன்பு இருந்தது போல பதிவு கட்டணம் மட்டும் ரூபாய் 10,000 என மாற்றியமைத்து உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்துள்ளதால்,  அதற்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு முதல் ஐந்து மடங்கு வரை உயர்ந்து பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. ஆகவே தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி இதனை திரும்ப பெற்று,
முன்பு இருந்தது போல நிலத்திற்கான பிரிபடாத பாகத்திற்கு மட்டும் கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்யும் வகையிலும், அதற்கான கட்டணம் முன்பிருந்தது போன்று ஒரு சதவீதம் எனவும் மாற்றம் செய்ய வேண்டுகிறோம்.
பதிவுத்துறையில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சனைகளை முத்தரப்பு குழு அமைத்து, இதில் பதிவுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து விரைவாக களைந்திட வேண்டுகிறோம்.
கிராம நத்தம் வகைபாடு உள்ள மனைகளை எந்தவித நிபந்தனையும் இன்றி, தங்கு தடை இன்றி பதிவு செய்ய வேண்டுகிறோம்.
நிலங்களின் வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட அதிகமாக இருந்தால்  குறைவு முத்திரை தீர்வை சட்ட பிரிவு 47/A1 இன் கீழ் சரியான சந்தை மதிப்பிற்கு ஈடாக பதிவு செய்தும் பிறகு வருவாய் துறையின் மூலம் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு முரண்பாடுகளை களையவும் சட்டம் வழி வகுத்துள்ளது.
ஆனால் பதிவுத் துறை குறைவு முத்திரை தீர்வை சட்ட பிரிவு 47/A1 இன் கீழ் ஆவணங்களை பதிவு செய்ய மறுக்கிறது. இது மேற்கண்ட குறைவு முத்திரை தீர்வை சட்டத்திற்கு எதிரான செயலாகும் ஆகவே முரண்பாடுள்ள வழிகாட்டி மதிப்புள்ள சொத்துக்களை மேற்கண்ட சட்ட பிரிவின் கீழ் எந்த விதமான தங்கு தடையின்றி பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
பதிவுத்துறையில் கிரைய ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம் உள்ளிட்ட பலவகையான ஆவணங்களுக்கு தற்போது உயர்த்தப்பட்டிருக்கிற முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் போன்றவற்றை பொதுமக்கள் நலன் கருதி, வெகுவாக குறைப்பதற்கு அரசு முன்வர வேண்டுகிறோம்.
பதிவுத்துறை அலுவலர்கள் ஒரு சிலர் ஆள் மாறாட்டம் மூலமும், போலி ஆவணங்கள் மூலமும் பதிவு செய்துள்ள போலி ஆவணங்களை ரத்து செய்து, அப்பாவி பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், தற்பொழுது நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள போலி ஆவண ரத்துச் சட்டம் சம்பந்தமாக பதிவுத்துறை மேல் நடவடிக்கை எடுத்து, மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுகிறோம்.
தமிழக முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் என்கிற அடிப்படையில் மாவட்டங்களின் அடிப்படையில் மனைகளுக்கும் நிலங்களுக்கும் குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் செய்ய பதிவுத்துறை தலைவர் அவர்கள் சுற்றறிக்கை எண்.30103/L2/2023, 18.08.2023. இல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களுக்கான மதிப்பு குறிப்பிடப்படவில்லை. பல மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பெரும்பகுதி விவசாய நிலங்கள் உள்ளது. குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்பு சம்பந்தமான மேற்கண்ட வழிகாட்டு சுற்றறிக்கையை பதிவுத்துறை உடனடியாக திரும்ப பெற வேண்டுகிறோம்.
——————————————-
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை குறித்த தீர்மானங்கள்.
கோவை மாவட்டத்தில் (டிடிசிபி) கோவை புறநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் நடைமுறைப்படுத்தியுள்ள “முழுமை திட்டம்” வரைவு குறித்த விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்து, அவர்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று, அதன் அடிப்படையில் மீண்டும் சரியான நில வகைபாட்டினை முழுமை திட்டத்தில் சரி செய்து விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும், அதுவரை முழுமை திட்ட பகுதிக்குள் புதிய வீட்டுமனை பிரிவு அனுமதிக்கோரி விண்ணப்பிக்கும் நிலங்களுக்கு குடியிருப்பு மனை வகைபாடாக கருதி  அனுமதி வழங்கிட வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம்.
2024-2025 ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில்  2500 சதுரடி பரப்பளவு கொண்ட மனைகளில் 3,500 சதுரடி வரை கட்டப்படும் (தரைதளம் மற்றும் முதல் தளம்) கட்டுமான திட்டங்களுக்கு புதிய  அறிவிப்பை வெளியிட்டார்.
இதில் பொதுமக்கள் விதிமீறல் கட்டடம் எதுவும் கட்ட மாட்டோம் என சுய சான்றளித்து அதற்குண்டான கட்டணங்களை முறையாக செலுத்தும் பட்சத்தில் உடனடியாக அங்கீகாரம் பெற்று கொள்ளும் வகையில் (Instant Approval) திட்டமிருந்தது. இதனை காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுகிறோம்.
மலைப் பகுதியின் எல்லையிலிருந்து 500 மீட்டருக்கு வெளியில் உள்ள நிலங்களை கிராமம் அடிப்படையில் இல்லாமல் புல எண்கள் வாரியாக வகைப்படுத்தி HACA தடையின்மை சான்று பெறுவதற்கு ஏதுவாகவும் வீட்டுமனை பிரிவாக ஏற்படுத்துவதற்கு ஏதுவாகவும் அரசு வழிவகை செய்ய வேண்டுகின்றோம்.
சாலைகள், மனைகள் மற்றும் கட்டிடங்களில் உள்ள மெட்ரிக் மீட்டர் அளவு மற்றும் சதுரடி அளவுகளில் உள்ள முரண்பாடுகளை களைந்து இரண்டிற்கும் பொதுவாக சமன் செய்யும் வகையில் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
கோவை புறநகர் வளர்ச்சி குழுமத்தில் (CUDA) அனுமதிகளை விரைந்து வழங்கவும், சிக்கல்களை களைந்து சீர்தூக்கி செம்மைப்படுத்தவும், எளிமைபடுத்தவும், மேல்முறையீடு மனுக்கள் மீது விரைந்து தீர்வுகள் ஏற்படுத்தவும் குழுக்கள் அமைத்து அதில் எங்கள் FAIRA கூட்டமைப்பின் சார்பில் பொறுப்பாளரை உறுப்பினராக நியமனம் செய்ய வேண்டுகோள் வைக்கின்றோம்.
தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் புதிய வீட்டுமனை பிரிவுகளை ஏற்படுத்துவதற்கு குறைந்தபட்சம் அணுகு சாலை ஆறு மீட்டர் என குறைத்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்.
மேலும் கோவை மாவட்டத்தில் அடர்த்தியாக வளர்ந்து வரும் நகரங்களில்  குடியிருப்பு பகுதிகளையும், வணிக வளாகப் பகுதிகளையும் கண்டறிந்து தொடர் கட்டிடப் பகுதியாக (CBA) மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெற்றுள்ள மனைகளில் வணிகப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட அலுவலகத்திலேயே வகைபாடு மாற்றத்திற்குண்டான கட்டணத்தை செலுத்தி வணிக பயன்பாட்டிற்கு கட்டட திட்ட அனுமதி பெறும் வகையில் வழிவகைசெய்ய வேண்டுகிறோம்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் TNCDBR-2019 இன் படி தற்போதுள்ள விதிகளில் சிறிய அளவு மனைகளில் போதிய தளபரப்பளவு (FSI) அடைய முடியவில்லை. இதனை மாற்றியமைத்து கட்டடத் திட்ட அனுமதியில் போதிய தள பரப்பளவை அடையும் வகையில் TNCDBR (2019) இல் திருத்தம் கொண்டு வந்து மாற்றியமைக்க வேண்டுகிறோம்.
மனைப் பிரிவு, நில வகைப்பாடு மாற்றம் மற்றும் கட்டிட திட்ட அனுமதியை பெறுவதற்கு தற்போது 28 க்கும் மேற்பட்ட துறைகளை அணுக வேண்டியுள்ளது. இதில் சுமார் 24 துறைகள் ஒற்றைச் சாளர முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும். தாமாக கோப்புகள் நகர்வதில்லை. இதற்கு கால நிர்ணயம் செய்து விரைவில் அனுமதி வழங்கும் வகையில் வடிவகை செய்ய வேண்டுகிறோம்.
அதேபோன்று நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளை ஒருங்கிணைத்து ஒற்றை சாளர முறை திட்டத்தில் இறுதி ஒப்புதலையும் இணையதளம் வாயிலாகவே 15 தினங்களுக்குள் (AUTOMATIC APPROVAL OR DEEMED APPROVAL) வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
ஒரு ஹெக்டேருக்குள் அமைக்கும் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமாக சலுகை பெறும் வகையில், ஒரே விண்ணப்பதாரர் தமது பெயரில் தொடர்ந்து மீண்டும் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில்  இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்கின்ற கால அவகாசத்தையும்,
அதே விண்ணப்பதாரர் தமது மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளிட்ட இரத்த சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் விண்ணப்பிக்க நேரிடும் இனங்களில் ஓராண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கும் வகையிலும், கால அவகாசத்தை நிர்ணயிக்க வேண்டுகிறோம்.
மலைப்பகுதிகளின் அருகில் உள்ள அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில் விற்கப்படாத மனைகளை மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் அரசாணை எண் 65/2020 ஐ மேலும் 6 மாத காலம் கால நீட்டிப்பு செய்திட வேண்டுகிறோம்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் பொது கட்டிட விதிகள் 2019 இல் உள்ள பல விதிகள் மலைப்பகுதிகளுக்கு பொருந்தவில்லை.  ஆகவே மலைப் பகுதிகளுக்கென தனியாக புதிய கட்டிட விதிகளை உருவாக்கிட வேண்டுகிறோம்.
ஏற்கனவே நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் (DCR) அபிவிருத்தி மற்றும் கட்டுப்பாடு விதிகளின்படி தமிழகம் முழுவதும் டிடிசிபி அனுமதி பெற்றுள்ள வீட்டுமனை பிரிவில் உள்ள சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை அப்பாவி பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர். இதனை குடியிருப்பு மனையாக தற்போது மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது, dtcp புதிய விதிகளின்படி திறந்தவெளி நிலம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். அப்படி திறந்தவெளி நிலம் ஒதுக்கவில்லை எனில் அப்பாவி பொதுமக்களின் மனுவினை நிராகரிக்கின்றனர். அரசு இதனை கவனத்தில் கொண்டு பழைய விதிகளின்படி அனுமதி பெற்ற மேற்படி ஒதுக்கீடுகளை புதிய விதிகளின்படி திறந்தவெளியில் நிலத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தாமல் நில பயன்பாட்டினை மட்டும் மாற்றம் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம்.
புதிய கட்டுமான திட்டங்களுக்கு 1A மின் இணைப்பு கோரி  விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிற மின் மீட்டர் பற்றாக்குறையை போக்கி 15 தினங்களுக்குள் மின் இணைப்பை வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
கிராம நத்தம் பட்டா வகைப்பாடு சம்மந்தமான தகவல்கள் தற்பொழுது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு தரப்பில் இது குறித்த சரியான விளக்கத்தை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டுமென வேண்டுகோள் வைக்கின்றோம்.
——————————
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்..
கடந்த 20/10/2016 க்கு முன்பாக பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள அனுமதியற்ற மனைகளுக்கு கட்டிட திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்கும் போது திறந்தவெளி நிலத்திற்கான கட்டணம் செலுத்துவதிலிருந்து  விலக்கு அளித்து அரசாணை எண்: 95/2023 ஆக வெளியிட்டமைக்கும்,
புதிய வீட்டுமனை பிரிவினை ஏற்படுத்துவதற்கு ஏழு மீட்டர் அணுகு சாலை என்ற அளவினை கிராமபுரங்களில் 6.0 மீட்டர் எனவும், பேரூராட்சி பகுதிகளில் 6.5 மீட்டர் எனவும் குறைத்து அரசாணை எண்: 58/2024 ஆக வெளியிட்டு நடைமுறைப்படுத்தியமைக்கும்,
தரைதளம் மற்றும் மூன்று தளத்திற்கு 12 மீட்டர் உயரம் என்கிற அளவுகோலினை மாற்றியமைத்து, 14 மீட்டர் வரை கட்டடம் கட்டும் வகையில் உயரத்தின் அளவுகோலினை மாற்றியமைத்து அரசாணை எண்: 69/2024 ஆக வெளியிட்டு நடைமுறைப்படுத்தியமைக்கும்,
கட்டட  பணி நிறைவு சான்று பெறுவதில் தற்போது G+3 அடுக்கு கட்டடத்திற்கு 720 சதுர மீட்டருக்குள் உள்ள மனைகளில் கட்டப்படும் மூன்று யூனிட் வீடுகளுக்கு விலக்களிக்கப்பட்டிருந்தது, இதனை மாற்றியமைத்து தற்போது 750 சதுர மீட்டருக்குள் உள்ள மனைகளில் கட்டப்படும்  8 யூனிட் (அலகு) வரை G+3  அடுக்கு கட்டிடங்களுக்கு கட்டட பணி நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு அளித்து அரசாணை எண்: 70/2024 ஆக வெளியிட்டு நடைமுறைப்படுத்தியமைக்கும்,
அனுமதிக்கப்படாத மனைப்பிரிவுகளில் விற்கப்படாத மனைகளின் பரப்பளவு 50 ஆயிரம் சதுர அடிக்குள் இருக்கும் பட்சத்தில் அதற்கு ஈடாக 10% OSR நிலம் ஒதுக்கீட்டில், திறந்தவெளி நிலமாகவோ அல்லது அதற்குண்டான கட்டணமாகவோ செலுத்தும் வகையில் வழிவகை செய்து அரசாணை எண்: 94/2024 ஆக வெளியிட்டு நடைமுறைப்படுத்தியமைக்கும் தமிழக அரசுக்கும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
————————————
தமிழக வருவாய் துறைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம். 
வருவாய் துறையின் இணையதளம் வாயிலாகவே பட்டா மாறுதல் மற்றும் நில அளவை  கோரி விண்ணப்பிக்கவும்,
கிராம நத்தம் மனைகள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கும்,
தமிழகத்தில் சொத்துக்களை வாங்குகின்ற பொது மக்களுக்கு தானியங்கி முறையில் பட்டா மாறுதல் திட்டத்தை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியமைக்கும்  நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் தேசிய செயற்குழு உறுப்பினர் A. கருப்புசாமி
தேசிய இணை செயலாளர் C. பாலசுப்ரமணி தேசிய செயற்குழு உறுப்பினர் VP விஜி
தேசிய ஆலோசனை குழு உறுப்பினர் I. அசோக் குமார் தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர்
B நிவாஸ்மாநில ஒருங்கிணைப்பாளர் P. கணேஷ் குமார் மாநில செயற்குழு தலைவர் M செல்வகுமார் மாநிலத் துணைத் தலைவர் R C தியாகராஜன் மாநில செயற்குழு உறுப்பினர் K விஸ்வநாதன் மாநில செயலாளர் நிர்வாகம் C கார்த்திக் மாநில துணைச் செயலாளர் சிந்து K ராமமூர்த்தி ஈரோடு மாவட்ட தலைவர் S ஹரி கிருஷ்ணன்
சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் N. கண்ணன் திருப்பூர் மாவட்ட தலைவர் JK குமார்
கோவை மண்டல தலைமை நிலைய செயலாளர் V கிருஷ்ணமூர்த்தி கோவை மாவட்ட செயலாளர் Er சரவணகுமார்திரு பிரபு திரு மெடிக்கல் நாராயணன் திரு தீர்த்தகிரி வடக்கு மாவட்ட தலைவர் திரு சந்தோஷ் குமார்
மேலும்
கோவை மண்டல பொறுப்பாளர்கள் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் தேசிய மாநில மாவட்ட தாலுகா நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *