மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு, உறுப்பினர் அட்டை வழங்கும் விழா!
மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு, உறுப்பினர் அட்டை வழங்கும் விழா!
சென்னை பிரஸ் கிளப் சார்பில் இப்தார்நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற் றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா,மார்ச்.31 அன்று சென்னைகிண்டி மலையப்பா அரங்கில் நடைபெற்றது.
மூத்த பத்திரிகையாளர்கள் சங்கொலி நெடுமாறன் மற்றும் இதழாளர் இசைக் கும்மணி ஆகியோருக்கு வாழ்நாள் உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்பு செய்யப் பட்டது.
சென்னை பிரஸ் கிளப் தலைவர் செல்வ ராஜ், துணைத் தலைவர் ராஜன்பாபு தேவகடாட்சம், பொதுச் செயலர் விமலே ஸ்வரன், பொருளாளர் கோவிந்தராஜன்,
மதிப்புறு ஆலோசகர் புகாரி ஷெரிப், நிர்வாக சீரமைப்பு குழுவின் மொய்தீன்
கஃப்பார், காதர், மூத்த பத்திரிகையாளர் சங்கத்தின் “கட்டுமானத்தொழில்” சிந்து பாஸ்கர், போட்டோ திருநாவுக்கரசு, “செய்தி அலசல்” பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கும் ஏனைய பிற உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.
தொடக்கத்தில் ஹிண்டு பத்திரிகையாளர் தொழிற்சங்கத்தின் மேநாள் தலை வர் கோபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், காங்கிரஸ்கட்சியின் இதய துல்லா “இப்தார்” நோன்பின் சிறப்பு களை எடுத்துரைத்திட்டார். அருட்தந்தை லியோ லாரன்ஸ் ‘புனிதவெள்ளி’ ‘ஈஸ்டர்’ திருநாளின் வழிபாட்டு சிறப்புகளை எடுத்துரைத்திட்டார்.
மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர். “மதங்களை கடந்தது மனிதநேயமே” என்பதை உணர்த்தியதாக அமைந்திருந்ததுசென்னை பிரஸ் கிளப் உறுப்பினர்களின் ஒற்றுமைவிழா!
எந்தவொரு சங்கத்திலும் அமைப்பிலும் இருந்தாலும் பத்திரிகையாளர் ஒற்றுமை ஒருமைப்பாட்டை உயர்த்திப்பிடித்திடுவோம்! உரிமைகளை காத்திடுவோம்!!