தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நலன் கருதி பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம்.

Loading

தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நலன் கருதி பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம்.
தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்துகின்ற வீட்டுமனை பிரிவுகளில் சாலைகளை தவிர்த்து, தளவமைப்பிற்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் 2019, பிரிவு 47 உட்பிரிவு (8) இன் படி 0.5% சதவீதம் நிலத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு தானமாக கொடுக்க வேண்டும். இப்படி தானமாக கொடுக்கும் நிலத்திற்கு தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை, அரசு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் 7% சதவீதம் முத்திரை தீர்வையும், 2% சதவீதம் பதிவு கட்டணமும் செலுத்த வேண்டும் என நியாயமற்ற முறையில் வலியுறுத்தி வசூலித்து வருகிறது.
இதனால் வீட்டுமனை அபிவிருத்தியாளர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு தங்களின் இடத்தை தானமாக கொடுப்பதுடன் அதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டும் என்பது எந்த வகையிலும் நியாயமாகவோ அல்லது ஏற்புடையதாகவோ இல்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
ஏற்கனவே தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை இந்திய முத்திரைச் சட்டம், 1899 (மத்திய சட்டம் II, 1899) இன் பிரிவு 9 இன் துணைப்பிரிவு (1) இன் ஷரத்து (a) மூலம் எண். II(2)/CTR/514/2012. இன் அடிப்படையிலும்,
எண். II(2)/CTR/515/2012. -பதிவுச் சட்டம், 1908 (1908 ஆம் ஆண்டின் மத்தியச் சட்டம் XVI) பிரிவு 78-A இன் படி உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் குரூப் ஹவுசிங் அல்லது வணிக வளாகத்திற்கு தான பத்திரங்களை  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு எழுதி பதிவு செய்து கொடுக்கும் இனங்களில் பெயரளவிற்கு மதிப்பு ரூ.100/- (ரூபா நூறு மட்டுமே). குறிப்பிட்டு  பதிவு செய்தால் போதுமென விலக்களித்து அரசாணை எண். 107/2012, தேதி: 03.08.2012, ஆக வெளியிட்டு நடைமுறைப்படுத்தி உள்ளது.
ஆகவே பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் வீட்டுமனை அபிவிருத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, மேற்கண்ட பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, விரைவில் தகுந்த தீர்வினை ஏற்படுத்தும் வகையில், இந்த அரசாணையில் (G.O.Ms.No.107/2012) மேற்படி வீட்டுமனை பிரிவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிலங்களுக்கும் முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை விலக்கு அளிக்கும் வகையில் திருத்தம் (Amendment) கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி உதவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து ஆ.ஹென்றி கடிதம் எழுதி உள்ளார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *