தேசிய இளையோர் நாடாளுமன்ற விழா

Loading

தேசிய இளையோர் நாடாளுமன்ற விழா 2024-ன் நிறைவு நாளில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, திரு அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் உரையாற்றினார்கள்

தேசிய இளையோர் நாடாளுமன்ற விழா, 2024-ன் நிறைவு நாளான இன்று புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் உரையாற்றினார்கள்.

அப்போது பேசிய திரு ஓம் பிர்லா, போட்டியில் பங்கேற்ற அனைவரையும், வெற்றி பெற்றவர்களையும் பாராட்டினார். மைய மண்டபத்திற்கு ஒரு வரலாறு உள்ளது என்றும், சுதந்திரத்திற்குப் பிறகு அரசியலமைப்பை உருவாக்குவதில் இந்த மண்டபம் மையமாக இருந்தது என்றும் அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி இளைஞர்களிடமிருந்தும், நமது வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை அடைவதிலும் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளார் என்றும் திரு ஓம் பிர்லா கூறினார். இளைஞர்களின் சிந்திக்கும் திறன், புதுமை படைப்பாற்றல் திறன், பணியாற்றுவதற்கான ஆர்வம் ஆகியவை 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த பாரதமாக மாற்றுவதற்கு கருவியாக இருக்கும் என்று அவர் கூறினார். இந்தியா தற்போது நவீனமயமாக்கலை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாகவும், அதே நேரத்தில் தனது பாரம்பரியத்தை அப்படியே பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய திரு அனுராக் சிங் தாக்கூர், இளைஞர்களின் உறுதியான குரல் ஒரு நாடாக இந்தியாவின் உறுதியைக் காட்டுகிறது என்று கூறினார். தொழில்நுட்பத்தின் நேர்மறையான பயன்பாட்டையும், பலவீனமான ஐந்து பொருளாதாரங்களிலிருந்து உலகின் முதல் ஐந்து இடங்களுக்கு முன்னேற்றத்தையும் இந்தியா கண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *