பட வாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைத்தனர்-கிரண்

Loading

பட வாய்ப்பு தருவதாக படுக்கைக்கு அழைத்தனர்-கிரண்

தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், தென்னவன், அரசு, வின்னர், நியூ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள கிரண் சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
கிரண் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு மூன்று திருமணம் ஆகிவிட்டது என்றும், மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் கண்டபடி பேசுகிறார்கள்.
தமிழ் சினிமாவுக்கு வந்த பிறகு ஒரு படத்திலேயே மிகப்பெரிய ஸ்டார் ஆனேன். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு காதலரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாக நினைத்தேன். இதனால் அஜித் போன்ற பெரிய நடிகர்கள் படங்களை கூட தவிர்க்கும் நிலைக்கு ஆளானேன். ஆனால் அந்த காதல் கைகூடாமல் போக, பட வாய்ப்புகளும் குறைந்தது. எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் தருவதாக நெருங்கி பழகிய நண்பர்களே இரவில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை அழைத்தார்கள். அப்போதுதான் சினிமாவில் யாரும் நண்பர்கள் இல்லை என்ற உண்மையை புரிந்து கொண்டேன்.
நல்லவர்கள் என்று பழகிய அத்தனை பேரும் என்னை படுக்கைக்கு அழைத்தனர். இதனால் சற்று அதிருப்தி அடைந்தேன். எத்தனையோ நடிகைகள் பிகினி அணியும்போது, என்னை மட்டும் ஆபாச நடிகை என்று முத்திரை குத்த தொடங்கினர். பிரபல நடிகர் ஒருவர் என்னை காதலித்து ஏமாற்றியது உண்மைதான். ஆனால் அதைப் பற்றி எல்லாம் நான் அதிகம் பேச விரும்பவில்லை” என்றார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *