விவசாயிகளுக்கு வேண்டியது சந்தைகள், கொடை அல்ல டாக்டர் சஞ்சீவ் சோப்ரா
விவசாயிகளுக்கு வேண்டியது சந்தைகள், கொடை அல்ல
டாக்டர் சஞ்சீவ் சோப்ரா,
வரலாற்று ஆய்வாளர் , கட்டுரையாளர் மற்றும் விழா இயக்குநர்
கடைசி மூன்று பாரத ரத்னா விருதுகள், இந்திய விவசாய
தொழில்முனைவு உணர்விற்கு மரியாதை செலுத்துவதாக அமைந்தது.
சரண் சிங் மற்றும் பி.வி நரசிம்மராவ் ஆகிய இரண்டு முன்னாள்
பிரதமர்களுடன் அறிவியல் நிர்வாகியான டாக்டர் எம். எஸ்.
சுவாமிநாதன் ஆகிய மூவரும் வேளாண்மை மற்றும் விவசாயிகளின்
நலனில் தனிப்பட்ட முறையில் தீவிர ஆர்வம் காட்டினார்கள்.
சுவாமிநாதனின் பங்களிப்பு நன்கு அறியப்பட்டதாகவும்,
அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருந்தாலும், பசுமைப் புரட்சி வெற்றி பெற
காரணமாக இருந்த அரசியல் பொருளாதாரத்தின் பின்னணியைப்
புரிந்துகொள்வதும் அதே அளவு முக்கியம். பி.வி நரசிம்மராவ்-இன்
ஆட்சிக் காலத்தின் போது தான் இந்தியா உலக வர்த்தக அமைப்பில்
இணைந்து, வேளாண் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்
காரணமாக இந்தியா வேளாண் துறையில் உலகளவில்
கோலோச்சியது. அதுவரை இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதில்
இந்திய கொள்கைகள் கவனம் செலுத்தின. ராவின் ஆட்சிக் காலத்தில்,
இந்தியா, வேளாண் ஏற்றுமதியை ஒரு முக்கியமான அந்நியச்
செலாவணி ஈட்டும் வாய்ப்பாகக் கருதியது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 14-ஆம் தேதி பிரதமர்
நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றகரமான
முன்முயற்சிக்கு இதுபோன்ற நடவடிக்கைகள் பின்னணியாக இருந்தன.
தேசிய வேளாண் சந்தை தளமான இந்தத் திட்டம், இயல் மற்றும்
டிஜிட்டல் கலவையின் சந்தையாகும். இந்த ஒற்றைச் சாளர தளம்
இயங்கக்கூடிய தகவல்கள், கட்டமைப்பு வசதிகள், வர்த்தக வாய்ப்புகள்
மற்றும் நிதித் தீர்வுகள் ஆகியவற்றை வழங்குகிறது. பொருட்களின்
வரத்து, தரம் மற்றும் விலைகள் குறித்த தகவல்கள் இதில்
இடம்பெற்றுள்ளன. வணிகக் கூடங்கள், சேமிப்புக் கிடங்குகள், எடைமேடைகள்,
வகைப்படுத்தும் இயந்திரங்கள், ஈரப்பதத்தை பரிசோதிக்கும்
கருவிகள் மற்றும் எடையிடுதல், மதிப்பீடு செய்தல் மற்றும்
கிடங்கு போன்ற சேவைகள் உள்கட்டமைப்பின் கீழ்
வழங்கப்படுகின்றன. வர்த்தக மற்றும் மின்னணு கட்டணங்கள்
நேரடியாக விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படுகின்றன.
சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தகக் கூட்டமைப்பின் இந்த
முன்முயற்சியால், நாடு முழுவதும் உள்ள 10.7 மில்லியன்
விவசாயிகள் 23 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில்
தங்களது சொந்த தாய் மொழியில் செல்பேசியைப் பயன்படுத்தி 1389
முறைப்படுத்தப்பட்ட மொத்த விலை சந்தைகளில் சுலபமாக
பரிமாற்றம் செய்யும் வசதியையும், சுதந்திரத்தையும்
பெற்றிருக்கிறார்கள். மேலும், இத்திட்டத்தில் இணைந்துள்ள
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் 1.7 லட்சம்
ஒருங்கிணைந்த உரிமங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்தத்
தளத்திற்கு 3500 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின்
ஆக்கப்பூர்வமான பங்களிப்பு மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஜனவரி 2024 நிலவரப்படி, இந்தத் தளத்தில் ரூ. 3 லட்சம் கோடிக்கு
மேல் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
தனது புகழுடன் திருப்தி அடைவதற்குப் பதிலாக, தேசிய வேளாண்
சந்தை தளம், புதிய மற்றும் உயர்ந்த தரங்களை அமைத்து வருகிறது.
அதன் திருத்தப்பட்ட ஆணை, தளத்தின் விரிவாக்கம் மற்றும்
ஒருங்கிணைப்பை உள்ளடக்கி இருப்பதுடன், விவசாயிகளுக்கு
போட்டி விலையையும் உறுதி செய்கிறது. சேமிப்புக் கிடங்குகள்
அடிப்படையிலான விற்பனை மற்றும் மின்னணு மாற்றத்தக்க கிடங்கு
ரசீது வர்த்தகம் ஆகியவற்றின் மூலம் தேசிய வேளாண் சந்தை
வர்த்தகத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தர
மதிப்பீடு மற்றும் நம்பகமான வர்த்தக தரநிலைகளுடன், இது
மண்டிகளுக்கு இடையேயான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான
வளர்ச்சியை ஊக்குவிக்கும். விலைகளின் வெளிப்பாடும்,
விற்பதற்கான சுதந்திரமும் விவசாயிகளுக்கு அதிக செழிப்பை
அளிக்கும் என்பது உறுதி.