மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், அவர்கள் திடீர் ஆய்வு
கோணம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், அவர்கள் திடீர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் கோணம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள்
வாணிப கழகத்தின் கிடங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர்,
அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கன்னியாகுமரி மண்டலம் கோணம்-1 மற்றும்
கோணம் -2 கிட்டங்குகளை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்காணும் இரண்டு
கிடங்குகளையும் ஆய்வு மேற்கொண்டபோது இருப்பு பதிவேட்டின்படி அத்தியாவசிய உணவு
பொருட்கள் சரிபார்க்கப்பட்டது. மேலும் பொது விநியோக திட்டத்திற்கு விநியோகம்
செய்யப்படும் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களின் எடை மற்றம் தரம் குறித்து
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து பெறப்பட்ட 517.449 மெ.டன்
பழுப்புநிற மிகை அரிசி இருப்பில் உள்ளது தொடர்பாக துறை அலுவலர்களுடன்
கேட்டறியப்பட்டதோடு, குடோனில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள பழுப்புநிற மிகை அரிசியை
இ-டென்டர் மூலம் 08.12.2023 அன்று விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருவதாக நுகர்பொருள் வாணிபகழக மேலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் அமுதம் நியாய விலைக்கடைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை
சமர்சீர்செய்து லாரிகளில் அனுப்பிவைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு
மேற்கொண்டார்கள்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.விமலா ராணி, நுகர்பொருள்
வாணிய கழக மண்டல மேலாளர் திரு.செல்ல பாண்டியன், துணை மேலாளர் (தரக்கட்டுபாடு)
திரு.பிச்சை முருகன், கண்காணிப்பாளர் திரு.முருகன், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து
கொண்டார்கள்.
வெளியீடு – செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம்