மம்முட்டி குடும்பத்தில் இணைந்த சாக்ஷி அகர்வால்

Loading

மம்முட்டி குடும்பத்தில் இணைந்த சாக்ஷி அகர்வால்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். தற்போது தமிழ் திரையுலகில் நாயகியாக வித்தியாசமான வேடங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது.
மலையாள நடிகர் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடிக்கிறார் இவர்.
அதுமட்டுமல்லாமல் தற்போது தமிழில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, ரஜித் கண்ணா இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படமான ‘சாரா’வில் பரபரப்பாக நடித்து வருகிறார். மேலும், ‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அத்துடன், ‘கெஸ்ட் 2’ உட்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சாக்ஷி அகர்வால்.
கியூட் ஹீரோயினாக கலக்கி வரும் சாக்ஷி அகர்வாலுக்கு, தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து, பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் சாக்ஷி அகர்வாலை பாலிவுட் படத்திலும் காணலாம். இந்த தீபாவளி, நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு மிகப்பெரும் கொண்டாட்டமாக, பான் இந்திய தீபாவளியாக அமைந்துள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *