மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு.
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள்…மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் அவர்கள் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் தூத்தூர், நடைக்காவு, சூழால், வாவறை, முஞ்சிறை, பைங்குளம், விலாத்துறை ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:-
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம் தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூத்துறை பகுதியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.25 இலட்சம் மதிப்பில் புதிய சமுதாய சுகாதார கட்டிடம் அமைக்கும் பணியினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023 – 24 இன் கீழ் ரூ.14.31 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணிகளும், 15-வது நிதிக்குழு 2023-24 திட்டத்தின்கீழ் தூத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகில் பவர் பிளாக் அமைத்தல் ஆகிய பணிகளையும். நடைக்காவு ஊராட்சிக்குட்பட்ட வாழனூர் பகுதியில் ஜல் ஜீவன் திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.9.85 இலட்சம் மதிப்பில் காஞ்சிரக்கோடு முதல் சாத்தன் கோடு வரையுள்ள கால்வாய்களை துர்வாரும் பணியினையும், சூலால் ஊராட்சிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.24.70 இலட்சம் மதிப்பில் வெங்கஞ்சி அரசு தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து. வாவறை ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.13.25 இலட்சம் மதிப்பில் மணலி முதல் பள்ளிக்கல் வரையிலான சாலை மேம்பாட்டு பணியினையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.18 இலட்சம் மதிப்பில் பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியிணையும், முஞ்சிறை ஊராட்சிக்குட்ப்பட்ட பார்த்திவபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022 – 23 இன் கீழ் ரூ.13.75 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணிகளும், பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.17.50 இலட்சம் மதிப்பில் குரங்கினார்விளை முதல் முள்ளகிரிவிளை வரையிலான சாலை மேம்பாட்டு பணியினையும், விலாத்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.9.60 இலட்சம் மதிப்பில் தையல் இயந்திர அறை கட்டும் பணியினையும், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியினையும், நெல்லிகாவிளை பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறுமாவட்ட ஆட்சித்தலைவர்
ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்கள்.நடைபெற்ற ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி
முகமை திட்ட இயக்குனர் பாபு,
செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் ராஜேஷ், டேவிட், ஊராட்சிமன்ற தலைவர்கள் லைலா(தூத்தூர்) மெற்றில்டா, உதவி பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்…