பொய்யான வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துமா தேர்தல் ஆணையம்.

Loading

பொய்யான வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்துமா தேர்தல் ஆணையம்.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி இலவசங்கள் எதையெல்லாம் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று பட்டியல் தயாரித்துவருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகள் ஏழை எளியோருக்கு அறிவிக்கின்ற திட்டங்கள்யாருக்கெல்லாம் கொடுக்கப் போகிறார்கள் என்று தெளிவாக அறிக்கையில் வெளியிட வேண்டும்.
அரசியல்வாதிகள் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் இதை தருகிறோம் அதை தருகிறோம் என்று வாயால் முழக்கமிட்டு சென்று விடுகிறார்கள். பிறகு அவர்களால் பல திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்ற முடியவில்லை இதனால் தேர்தலில் வெற்றி பெற்று வரக்கூடிய அரசுக்கு கெட்ட பெயரும் ஆங்காங்கே போராட்டங்களும் பொதுமக்கள் நடத்துகின்றனர். இப்பொழுதெல்லாம் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து சீட் ஃபண்ட் முதலீடு, அதிக வட்டி தருவதாக முதலீடு , ஒரு லட்சம் கொடுத்தால் இரண்டு லட்சம் தருவதாக வாக்குறுதி கொடுத்து நிறுவனத்தை ஆரம்பித்து மக்கள் பணத்தை சுரண்டி கொண்டு வெளிநாடு தப்பி ஓடி விடுகிறார்கள். இது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களும் அதில் தான் முதலீடு செய்கிறார்கள் பிறகு ரோட்டிலே வந்து அவர் 100 கோடி ஏமாற்றி விட்டார் 200 கோடி ஏமாற்றி விட்டார் ஆயிரம் கோடி ஏமாற்றி விட்டார் என்று சொல்லுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதே போல தான் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளும் இருக்கிறது.நிறுவனத்தை வைத்து ஏமாற்றம் நிறுவன உரிமையாளர்களை  காவல்துறை ஒடுக்க வேண்டும்.
இதுபோல் அரசியல்வாதி தவறான வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை மக்களுக்கு கொடுப்பதில் குழப்பம் ஏற்பட்டு பாதியிலேயே நின்று விடுகிறது. ஏதோ ஆறு கோடி இருக்கும் மக்களுக்கு ஒவ்வொரு அறிக்கையும் தந்துவிட்டு பிறகு நாங்கள் ஒரு கோடி பேருக்கு தருகிறோம் என்று பேசுவது அர்த்தம் அல்ல. ஆகவே இவர்கள் அளிக்கும் வாக்குறுதி அதற்கு தேவையான பணம் எங்கிருந்து வரும் எப்படி தர போகிறோம் இதையெல்லாம் பிரமாணம் பத்திரமாக தேர்தல் ஆணையம் எழுதி வாங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்குள் அரசை எப்படி நடத்த வேண்டும் என்ற பயம் இருக்கும். இது எல்லாம் கண்டு கொள்ளாமல் சட்டத்தில் இருக்கும் ஓட்டையை வைத்து  அரசியல்வாதிகள் எது வேணாலும் சொல்லலாம் என்று உயர் நீதிமன்றத்திலே ஏதாவது ஒரு வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்தால் அதையே அரசியல்வாதிகள் பிடித்துக் கொண்டு மேலும் மேலும் மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுவாழ்வில் வருவது என்றால் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வர வேண்டும் முன்பெல்லாம் அண்ணா நேரு காந்தி காமராஜர் இவர்களைப் போன்றவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தார்கள் ஆனால் இப்பொழுது அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் 10 கோடி போட்டால் 20 கோடி சம்பாதிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிக்குள் நுழைந்து கோடி கோடியாக கொள்ளையடித்து விட்டு பிறகு சிறையில் போய் இருக்கிறார்கள் இதுவும் சாதாரணமாக நடப்பதில்லை இதற்கு பல காலம் வழக்கு நடந்து அது ஊர்ஜிதமாகி பிறகு தீர்ப்பு வந்த பிறகு இது எல்லாம் நடக்கும். அதற்குள் அந்த ஆட்சிமுடிந்து போய்விடும் இப்படித்தான் நிலைமை காலம் காலமாக இருந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால் நீதித்துறையும் காவல்துறையும் உண்மையாக செயல்பட்டு வருமுன் காப்போம் என்று முடிவு எடுத்து தவறுகள் நடப்பதற்கு முன்னே கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள்  வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இப்பொழுது ஒரு அமைச்சர் நாங்கள் அதை எதிர்கொள்வோம் என்று சொல்லிவிட்டு இப்பொழுது சிறையில் இருந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. இவ்வளவு கோடி பணத்தை எடுத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறார் அதை மக்களுக்கு கொடுக்கலாமே.
இப்படி அரசியலில் சம்பாதித்த பணத்தை பினாமி பெயரில் நண்பர்கள் பெயரிலும் கோடி கோடியாக சேர்த்து வைத்திருக்கும் சொத்தை அரசாங்கம் பறிமுதல் செய்து அதை மக்களுக்கு ரோடு வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி இப்படி பல பகுதிகளில் இல்லாமலேயே இருக்கும் பகுதிகளுக்குஅவர்கள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு திட்டங்களாக செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதை நடைமுறை படுத்துமா தேர்தல் ஆணையம்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *