மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அவர்கள் பொதுமக்களிடம் இருந்நு 198 மனுக்களை பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா அவர்கள் பொதுமக்களிடம் இருந்நு 198 மனுக்களை பெற்றுக் கொண்டு பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி
உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் முகவரி திட்டத்தின்  கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் போர் நடவடிக்கையில் காலமான படை வீரரின் மகளுக்கு முன்னாள் படை வீரர் நல  தொகுப்பு நிதியிலிருந்து திருமண நிதியுதவியாக
 ரூர1,00,000 /- க்கான காசோலையினை வழங்கியும், 2018 –
ஆம் ஆண்டிற்கு கொடி நாள் வசூலாக ரூ.5,37,500/- நிதி வசூலித்தற்காக 30 கிராம் வெள்ளி
பதக்கத்தினை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் 2018
 மற்றும்  2019 ஆம் ஆண்டுகளுக்கு கொடி நாள் வசூலாக 60 கிராம் வெள்ளிப் பதக்கத்தினை மாவட்ட ஊராட்சி செயலாளருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டினார்.நீலகிரி மாவட்டத்தில் திருநங்கைகள் சொந்த தொழில் துவங்கும் திட்டத்தின் கீழ் முதன் முறையாக இரண்டு திருநங்கைகளுக்கு தலா ரூ.50,000/- ஆம் வீதம் மொத்தம் 1,00,000/- வழங்குவதற்கான ஆணையினையும்
நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி சார்பாக வழங்கப்பட்ட ரூ.29,000/- மதிப்பிலான 50 லிட்டர் கொள்ளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் இயந்திரத்தினை பள்ளி தலைமையாசி
ரியரிடம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனபிரியா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கல்பனா, மாவட்ட சமூகநல அலுவலர் பிரவீனாதேவி, முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர்( பொ) இந்திரகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், ரெட்கிராஸ் சொசைட்டி தலைவர் கேப்டன் மணி, ரெட்கிராஸ் சொசைட்டி சங்க உறுப்பினர்கள், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *