பதிவுத்துறையில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளை களைய முத்தரப்பு குழு அமைக்க வேண்டும்

Loading

சேலம்
பதிவுத்துறையில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளை களைய முத்தரப்பு குழு அமைக்க வேண்டும்.
 ஏராளமான வீட்டுமனை உரிமையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி வேண்டுகோள் .
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சேலம் மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது
தேசிய அமைப்பு செயலாளர் நேரு நகர் நந்து தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய துணை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வைத்தார் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவன தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்
ரியல் எஸ்டேட் துறையில் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்தும் அதனை களைய தேவையான எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்
தொடர்ந்து மாவட்ட நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் ஷகானா கலந்துகொண்டு மனை பிரிவு மற்றும் கட்டிட திட்ட அனுமதிகள் சம்பந்தமான உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்
தொடர்ந்து செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த  அவர் தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் நலம் கருதி தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒப்புதலை பெற்று பொதுமக்கள் வாங்கி வைத்துள்ள பட்டா மனைகளை அங்கீகாரம் பெரும் வகையில்  இறுதியாக ஒரு அரிதான வாய்ப்புகளை வழங்கி மனை வரன்முறை சட்டத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும் என்றும்
அனுமதிப் பெற்ற வீட்டுமனை பிரிவில் அமைந்துள்ள பொதுவகை  கட்டிடம் கட்ட ஒதுக்கீடுசெய்யப்பட்ட மனைகளை மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றார்
மேலும் கட்டிட திட்ட அனுமதிக்கு செலுத்தப்பட்ட பிணைய தொகையை கட்டிட முடிவு சான்று கொடுக்கும்போதே விண்ணப்பதாரருக்கு திரும்பி வழங்கிட வழிவகை செய்ய வேண்டும் என்றும் பதிவுத்துறையில் நிலவுகின்ற பல்வேறு பிரச்சினைகளை முத்தரப்பு குழு அமைத்து அதில் பதிவுத்துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்ற ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஒன்றிணைத்து குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்
வீட்டு மனைகளை மலைகளை எந்த விதத்திலும் நிபந்தனை இன்றி தங்கு தடை இன்றி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
கட்டுமான ஒப்பந்ததற்கான பதிவு கட்டணம் தற்போது மூன்று சதவீதமாக உள்ளது இதை மாற்றியமைத்து முன்பிருந்தது போல ஒரு சதவீதமாக மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்
மேலும் நிலங்களின் வழிகாட்டு மதிப்பை விட அதிகமா இருந்ததால் குறைவு முத்திரை தீர்வு சட்டப்பிரிவு சரியான சந்தை மதிப்பிற்கு ஈடாக பதிவு செய்தும் பிறகு வருவாய் துறையின் மூலமாக சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு முரண்பாடுகளை பழைய சட்டம் வழி வகுத்துள்ளது ஆனால் பதிவுத்துறை குறைவு முத்திரை தேர்வை சட்டப்பிரிவு 47 ஏ1 இன் கீழ் ஆவணங்களை பதிவு செய்ய மறுக்கிறது  இந்த முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்
உள்ளூர் திட்ட குழுமம் அனுமதி வழங்கியபோதும் இறுதியான  அனுமதி உள்ளாட்சி பிரதிநிதிகள் வழங்க வேண்டிய நிலை உள்ளது இதனால் பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது எனவே அனைத்தும் ஒரே குடையின் கீழ் ஆன்லைன் மூலம் அனுமதி பெற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழக அரசுக்கு முன் வைக்க முன் வைத்துள்ளதாக தெரிவித்தார்
இந்த கூட்டத்தில் சேலம் தருமபுரி நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் திரளாக பங்கேற்றனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *