அமெரிக்க நிறுவனங்களுக்கான ஏற்றுமதி அதிகார மையமாக இந்தியா உருவெடுத்து வருவதாக பிசிஜி அறிக்கை கூறுகிறது

Loading

அமெரிக்க நிறுவனங்களுக்கான ஏற்றுமதி அதிகார மையமாக இந்தியா உருவெடுத்து வருவதாக பிசிஜி அறிக்கை கூறுகிறது
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் அமெரிக்கா, சீனாவில் இருந்து இறக்குமதியை கணிசமாகக் குறைக்கக்கூடும் என்ற நிலை நிலவுகிறது. இதனால், அமெரிக்க நிறுவனங்களின் எதிர்கால ஏற்றுமதி ஆற்றல் மையங்களில் இந்தியாவும் ஒன்றாக உருவெடுத்து வருவதாக பாஸ்டன் கன்சல்டிங் குரூப்பின் (பிசிஜி) அறிக்கை கூறுகிறது.
இந்தியா, மெக்சிகோ மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவை ஏற்றுமதி உற்பத்தி சக்தியாக விரைவாக வளர்ந்து வருகின்றன. இவை மூன்றும்  செலவு குறைந்த அமைப்புகள், கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள், பரந்துபட்ட தொழில் திறன்கள் ஆகியவற்றை வழங்குகின்றன. மகத்தான உள்நாட்டுச் சந்தையைக் கொண்டிருப்பதன் மூலம்  கூடுதல் நன்மை இந்தியாவுக்கு உண்டு என்று அறிக்கை கூறுகிறது.
என்ஜின்கள் மற்றும் விசையாழிகளின் உற்பத்தியாளராக இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும் மகத்தான உள்நாட்டு சந்தையைக் கொண்டிருப்பதன் மூலம் இந்தியா கூடுதல் பலனைக் கொண்டுள்ளது என்று பிசிஜி கூறுகிறது.
அமெரிக்காவில்  உதிரி பாகங்களை ஒன்று சேர்க்கும் செலவுகள் அதிகமாக உள்ளன. தொழிலாளர் கட்டுப்பாடுகளும் அங்கு அதிகம் என்பதால், அந்நாட்டில் இந்த விஷயத்தில் ஒரு நிலையான கவலை சூழ்ந்துள்ளதாக  அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.  இந்த நிலையில், அமெரிக்காவுக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, மெக்சிகோ, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இந்தப்பணியை ஒப்படைப்பது. இரண்டாவது, செலவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தி, கொள்முதலை இந்தியாவுக்கு மாற்றுவது. மெக்சிகோ-ஜெர்மனியைத் தேர்வு செய்வதில், சந்தையில் நிலவும் தேக்க நிலை குறுக்கிடுகிறது ” என்று  அறிக்கை கூறுகிறது.
இந்தியா மிகவும் செலவு குறைவான  போட்டித்தன்மை வாய்ந்தது.  சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன்  வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியா ஒரு பெரிய ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. இதற்கு ஏதுவாக , அதனிடம் பரந்த உற்பத்தி தளம் உள்ளது.  மின்சார வாகனங்கள் முதல் ரசாயனங்களுக்கான  கனரக எந்திரங்கள்  வரை அனைத்தையும் தனது  உள்நாட்டு சந்தைக்கு இந்த உற்பத்தித் தளம் வழங்குகிறது” என்று அறிக்கை கூறுகிறது.
ஆய்வின்படி, ஏற்றுமதி தளமாக நேரடி உற்பத்திச் செலவுகளில் இந்தியா வலுவான இடத்தைப் பெற்றுள்ளது . உற்பத்தித்திறன், தளவாடங்கள், கட்டணங்கள் மற்றும் எரிசக்தி ஆகியவற்றிற்காக செலவாகும்  தொழிற்சாலை ஊதியங்கள் உள்பட, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியத் தயாரிப்பு பொருட்களின் சராசரி தரையிறங்கும் செலவு, அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களை விட 15% குறைவாக உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில், சீன இறக்குமதிக்கான தரையிறங்கும் செலவு ஆதாயம் 4% மட்டுமே என பிசிஜி  மதிப்பிட்டுள்ளது.
இதன் விளைவாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய உற்பத்தியில் இந்தியா வெற்றி  ஈட்டிய நாடுகளில்  ஒன்றாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவிற்கான அதன் ஏற்றுமதி 23 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.  இது 2018 முதல் 2022 வரை கணக்கிடுகையில் 44% அதிகமாகும்.  அதே காலகட்டத்தில், சீனாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்த  பொருட்களின் அளவு 10% குறைந்துள்ளது.
2018 முதல் 2022 வரை சீனாவில் இருந்து  செய்யப்பட்ட மெக்கானிக்கல் இயந்திரங்களின் அமெரிக்க  இறக்குமதி 28% சுருங்கியது. ஆனால் மெக்சிகோவிலிருந்து செய்யப்பட்ட இறக்குமதி 21 சதவீதமும், ஆசியானில் இருந்து 61 சதவீதமும், இந்தியாவில் இருந்து 70% சதவீதமும் அதிகரித்துள்ளது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *