ஜி20 தளம் மூலம் ஊழலைக் கட்டுப்படுத்துதல்
ஜி20 தளம் மூலம் ஊழலைக் கட்டுப்படுத்துதல்
– திரு ரித்விக் பாண்டே,
– திரு ஸ்மரக் ஸ்வெயின்,
– இணைச் செயலாளர் மற்றும் இயக்குநர்,
– வருவாய்த்துறை, நிதி அமைச்சகம்
லஞ்சம் பெறுவதை லாபமற்றதாக மாற்றுவதற்காக கடந்த சில
ஆண்டுகளில் இந்தியா கணிசமான முக்கிய முயற்சிகளை
எடுத்துள்ளது. இருந்த போதும் உலகமயமாக்கல் பெருகிவரும்
சூழலில் தேசிய எல்லைகளைக் கடந்து ஊழல் செயல்பாடுகள்
நடைபெறுகின்றன. இந்த அச்சுறுத்தலை தடுப்பதற்காக மேம்பட்ட
மற்றும் செயல்திறன் வாய்ந்த சர்வதேச ஒத்துழைப்பிற்கு ஜி20
தலைமைத்துவத்தின் போது இந்தியா வலியுறுத்தியுள்ளது.
முறைசார் ஒத்துழைப்பின் சவால்கள்
குற்ற சம்பவங்களில் பரஸ்பர சட்ட உதவியின் மூலம் ஊழல்
சம்பந்தமான குற்றங்களுக்கு முறைசார் ஒத்துழைப்பு
ஏற்படுத்தப்படுகிறது. விசாரணை, வழக்கு தொடர்தல் மற்றும் அது
சம்பந்தமான நடைமுறைகளில் பரஸ்பர சட்ட உதவிகளை
அதிகபட்சம் அளிக்குமாறு நிதி நடவடிக்கை பணிக்குழு நாடுகளை
கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் உண்மையில் உரிய
காலத்திற்குள் இத்தகைய பணிகள் நிறைவேற்றப்படுவதில்லை.
இதன் காரணமாக ஊழலுக்கு எதிரான நாடுகளின் போராட்டத்தில்
கணிசமான பாதிப்பு உருவாகிறது. ஊழல் வாயிலாக பெற்ற
சட்டவிரோத பலன்களை ஷெல் நிறுவனங்களின் பின்னணியில்
மறைப்பது பொதுவான குற்ற செயலாகும். இத்தகைய
சொத்துக்களை சோதனையிடுவதற்கு இது போன்ற நிறுவனங்கள்
பற்றிய போதுமான தகவல்களை நாடுகள் பெறுவது
அவசியமாகிறது. இந்தியா மற்றும் ஒரு சில நாடுகள் இத்தகைய
தகவல்களை வெளிப்படையாக வழங்கியுள்ள நிலையில்
பெரும்பாலான நாடுகள் வழங்க முன் வருவதில்லை. சர்வதேச
ஒத்துழைப்பில் இத்தகைய பாதிப்புகளை தடுப்பதற்கு ஜி20
தலைமைத்துவத்தின் வாயிலாக இந்தியா சிறந்த நடவடிக்கைகளை
எடுத்துள்ளது.
சொத்துக்களின் மீட்பு
குற்ற நடவடிக்கைகளின் போது பொருட்களை மீட்பது மற்றும்
திருப்பி அளிப்பதை ஊழல் தடுப்புக் கொள்கையின் நோக்கமாக ஜி20
உறுப்பு நாடுகளை பின்பற்றச் செய்வதில் இந்தியா
வெற்றியடைந்துள்ளது. குற்றத் தடுப்பு நடவடிக்கைகள்
பாதிக்கப்படுவதை தடுக்க உரிய காலத்தில் அவற்றை தடை
செய்தல், முடக்குதல் அல்லது பறிமுதல் செய்தல் ஆகியவற்றுக்கு
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி 20 நாடுகள் சம்மதம்
தெரிவித்துள்ளன.
நன்மை பயக்கும் உரிமைத் தகவல்
உலகம் முழுவதும் உரிமை கோராமல் கைப்பற்றப்பட்டிருக்கும்
செல்வத்தின் மொத்த மதிப்பு 7 ட்ரில்லியின் அமெரிக்க டாலரில்
இருந்து 32 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் வரை இருப்பதாக மதிப்பீடு
ஒன்று தெரிவிக்கிறது. இது உலகளாவிய செல்வத்தில் 10% ஆகும்.
உரிமைதாரர் மற்றும் கட்டுப்பாட்டாளர் குறித்த தகவல்களை
நிறுவனங்கள் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றால்
இது போன்ற செல்வத்தை மறைப்பது வெகு சுலபம். லாபம் பெறும்
உரிமைதாரர் குறித்த தரநிலைகளை அண்மையில் மாற்றியமைத்து,
அதன் மூலம் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்கு
நிதி நடவடிக்கை பணிக்குழு வித்திட்டுள்ளது. மாற்றி
அமைக்கப்பட்ட தரநிலைகளை உலகளவில் அமல்படுத்த ஜி20
நாடுகள் உறுதியளித்துள்ளன. அதே வேளையில் உரிமைதாரர்
குறித்த தகவல்களை பராமரித்து, அவற்றை பகிர்ந்து கொள்ளும்
அமைப்புமுறைக்கும் அந்த நாடுகள் இசைவு தெரிவித்துள்ளன.
மெய்நிகர் சொத்துக்கள்
மெய்நிகர் சொத்துக்கள் என்ற வடிவத்தில் பிளாக் செயினை
அடிப்படையாகக் கொண்ட அமைப்புமுறைகளில் சொத்துக்களை
மறைத்து வைக்கும் வசதி, ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு புதிய
சவாலாக முளைத்திருக்கின்றன. பிளாக்செயின் அடிப்படையிலான
அமைப்புமுறைகளில் உள்ள தனியார் பணப்பைகள், போலியான
பெயர்களில் நிதிகளை தவறாகப் பயன்படுத்தும் எண்ணற்ற
வாய்ப்புகளை வழங்குகின்றன. லஞ்சத் தொகையை எளிதாகப்
பெற்றுக் கொள்ளவும், பரிமாற்றம் செய்யவும் இவை வழிவகை
செய்கின்றன. மெய்நிகர் சொத்துக்களுடன் தொடர்புடைய பல்வேறு
இடர்களைக் கருத்தில் கொண்டு இத்தகைய சொத்துக்களைக்
கட்டுப்படுத்துவதற்கு விரிவான உலகளாவிய கொள்கையின்
மேம்பாட்டிற்கு ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி
ஆளுநர்கள் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.