8 காவல் நிலையங்கல் நடைமுறைக்கு தொடங்கி வைத்தார்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவின் நிலை குறித்து அறிய தனியார் மென்பொருள் நிறுவனத்தின் உதவியோடு புதிய PET மென்பொருள் (PETITION ENQUIRY TRACKING) உருவாக்கப்பட்டுள்ளது, அதனை இன்று கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கச்சிராபாளையம், உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருக்கோவிலூர், சங்கராபுரம் ஆகிய 8 காவல் நிலையங்களில் நடைமுறைக்கு தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் உள்ள வரவேற்பாளர்களிடம் மடிகணினி வழங்கப்பட்டு இந்த புதிய மென்பொருள் பதிவேற்றம் செய்து பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு விபரங்கள் பதிவு செய்யப்படும், மனுதாரரின் முகவரி, புகார் கொடுத்த தேதி, நேரம், மனுவின் தன்மை, காவல் நிலைய மனு விசாரணை அதிகாரி, மனுவின் நிலை உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இயங்கும்.
மனு விசாரணை முடித்த மனுதாரர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு கொண்டு காவல் நிலையங்களில் விசாரணை எவ்வாறு நடைபெற்றது, மனு விசாரணை அதிகாரி தங்களை எவ்வாறு நடத்தினார். மனு விசாரணை உரிய முறையில் நடைபெற்றதா? தங்களுக்கு முழுதிருப்தியாக உள்ளதா போன்ற விபரங்களை பெற்று காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தகவல் தெரிவிப்பார்கள். இதன் மூலம் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனு மீது விரைவாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் துணை காவல் கண்காணிப்பாளர் லட்சுமனகுமார், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவல் நிலைய வரவேற்பாளர்கள் கலந்து கொண்டன.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *