ஆலோசனை கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாநகராட்சி மண்டலம் வாரியாக மண்டல வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு 2022 மார்ச் 4ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பெற்ற நாள் முதல் மாநகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட 60 வார்டு பகுதிகளையும் முழுமையாக எந்தவித கட்சி பாகுபாடும் இன்றி அனைத்து பகுதிகளையும் முழுமையாக ஆய்வு செய்து எந்த பகுதிக்கு எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எப்படி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதை குறிப்பெடுத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமாக வைக்கப்பட்டு, அனைவருடைய கருத்துக்களுக்குப் பின் நிறைவேற்றப்பட்டு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக, எந்த சுயநலமும் இல்லாமல் பொதுநலன் தான் முக்கியம் என்ற குறிக்கோளோடு எதிர்கால தலைமுறையினரின் நலன் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் மாநகராட்சி நிர்வாகம் நல்லமுறையில் செயல்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கையாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்டு, அதை நிறைவேற்றிடும் வகையில் இரவு பகல் பாராமல் ரோந்து பணியில் காவல்துறையினர் போல் உலா வந்து தனது அலுவலகத்திலும் சந்திக்கும் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு பொதுநல அமைப்பைச் சார்ந்தவர்கள், எல்லா மதத்தை சார்ந்த தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகளையும் நடைமுறைப்படுத்தினால் நமது மாநகராட்சிக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் பெருமை கிடைக்கும் திட்டமாக இருந்தால், அதில் எந்த இடையூறுகள் யார் செய்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் கடமை ஒன்றே எனக்கு முக்கியம் மற்றவர்களின் விமர்சனம் எனக்கு ஏற்புரையாகவும் அறிவுரையாகவும் எடுத்துக் கொண்டு அதில் தேவைப்படும் கருத்துக்களை பயன்படுத்திக் கொள்வது வழக்கமான அவரது செயல்களில் அவருக்கு நிகர் அவர் தான், என்று 15 வார்டுகளை உள்ளடக்கிய தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என நான்கு மண்டலங்கள் செயல்படுகின்றன. இவர்களுக்கென்று தனியாக அலுவலகங்கள் இருந்து வருகின்றன. அதன் தலைவர்களாக வக்கீல் பாலகுருசாமி, அன்னலெட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், சுழற்சி முறையில் குறிப்பிட்ட ஒவ்வொரு காலத்திற்கு பின்பு ஒவ்வொரு மண்டல அலுவலகத்திற்கும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக சென்று அந்த மண்டலத்திற்குட்பட்ட அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை இணைந்து தங்களது பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்த கோரிக்கைகளை பகிர்ந்து கொண்டும் அதனை தீர்ப்பது குறித்து விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மில்லர்புரத்தில் உள்ள மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி மண்டல அன்னலட்சுமி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தெற்கு மண்டல பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடைபெற வேண்டிய மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கிற பணிகள் குறித்தும் பொதுமக்கள் நலன் கருதிய எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் உதவி ஆணையர் சேகர், சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன், சுகாதார ஆய்வாளர் கண்ணன், வருவாய் அலுவலர் ஜான்சன், உதவி பொறியாளர் திட்டம் ஆறுமுகம், டேப் இன்ஸ்பெக்டர் குமார், கவுன்சிலர்கள் கனகராஜ், சந்திரபோஸ், பொன்னப்பன், இசக்கிராஜா, ராமர், கண்ணன், ஜான், கந்தசாமி, பாப்பாத்தி, விஜயலட்சுமி, பொதுக்குழு உறுப்;பினர் கோட்டுராஜா, பகுதி செயலாளர் ரவீந்திரன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.