தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள்
நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அமரித் அவர்களின் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரம், வண்டி சோலை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள், மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த நபரின் கடையினை குன்னூர் வட்டாட்சியர் சிவக்குமார் அவர்களால் பூட்டி சீல் இடப்பட்டது.
மேலும், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் தொடரப்படும் எனவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பொது மக்கள், மற்றும் கடை விற்பனையாளர்
களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. மண்டல துணை வட்டாட்சியர் முனீஸ்வரன் அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் தீபக் மனோபாலா அவர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் உடன் இருந்தனர்.