திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது- புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்
ஆன்லைன் லாட்டரி சூதாட்டம் தடை விவகாரத்தில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது-
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இந்தியா முழுவதும் ஆன்லைன் லாட்டரி சூதாட்டம் நடைபெற்ற போது அதை தடை செய்ய தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்கள் உரிய சட்டம் கொண்டுவந்தார். சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அதன் பிறகு ஆட்சியில் அமர்ந்த திமுகவின் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்கள் ஆன்லைன் சூதாட்டம் தடைக்கு சரியான விளக்க காரணங்களை நீதிமன்றத்தில் எடுத்து வைக்க தவறியதால் அந்த சட்டம் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு தொடர்ந்து 8 மாதமாக ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தை தடை செய்ய திமுக சட்டமன்றத்தில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தற்போது வேறு வழியின்றி ஆன்லைன் லாட்டரி தடைக்கு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். ஆளுநரும் இந்த சட்டத்திற்கு ஒப்பதல் அளிக்காமல் திருத்தம் செய்ய சொல்லி திருப்பி அனுப்பியுள்ளார்.இதுவரை ஆன்லைன் லாட்டரி சூதாட்டத்தில் 45-க்கும் மேற்பட்ட அப்பாவிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுகவின் கையாளாகத அரசின் செயல்பாடே முதல் காரணமாகும். இன்று திமுகவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஆளுநர் அவர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதற்கும் திமுகவின் அலட்சியப்போக்கே காரணமாகும். ஒட்டுமொத்தத்தில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை சம்பந்தமாக திமுக தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு தனது நாடகத்தனமான செயலால் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. புதுச்சேரி மாநில அதிமுக இதை வன்மையாக கண்டிக்கிறது.அதிமுகவை அழித்து ஒழித்து இரட்டை இலையை முடக்கம் செய்ய அதிமுகவில் இருந்த ஒரு சிலரின் துணையோடு திமுக தலைவர் எடுத்த நடவடிக்கையில் முதல் தோல்வி ஏற்பட்டதன் விலைவாக தமிழக சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு அவமதிப்பை தேடித்தரும் விதத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒருசிலரை பயன்படுத்தி தமிழக முதலமைச்சரும் தமிழக சட்டப்பேரவை தலைவர் அவர்களும் ஆடும் நாடகம் மாண்புமிகு எடப்பாடியாரிடம் செல்லாது. தமிழக திமுக அரசுக்கு புதுச்சேரி அதிமுக எச்ச்ரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறது.அட்டவணை இனத்தை சேர்ந்த விளிம்பு நிலையில் உள்ள பல சமூகங்களை சேர்ந்தவர்கள் மிகுந்த சிரமத்துடனும், அவ நம்பிக்கையுடனும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. அட்டவணை இனத்தை பொறுத்தமட்டில் ஆதி ஆந்திரா, ஆதி திராவிடர், சக்கிளியன், ஜம்புவலு, குறவன், மதிசார், மலா, பக்கி, பல்லன், பறையர், சம்பன், தோட்டி, வள்ளுவன், வேடன், வேட்டையன், புதிர வண்ணான் உள்ளிட்ட 16 ஜாதிகள் உள்ளன. தமிழகத்தில் சக்கிளியன் எனும் ஜாதி ஒரு இழிவான சொல்லை கொண்டது என்ற காரணத்தினாலும் அவர்கள் சமுதாயத்தில் மதிப்புடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அப்போது ஆட்சி செய்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் அருந்ததியர் என பெயர் மாற்றம் செய்து அவர்களுக்கு அட்டவணை இனத்திலேயே 3 சதவீத உள்ஒதுக்கீட்டினை கொண்டு வந்தார்கள்.அதனை தொடர்ந்து புதுச்சேரியிலும் சக்கிளியன் என்ற பெயரை அருந்ததியர் என பெயரை மாற்றி தமிழகத்தை போல் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தோம். ஆனால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதுவரை புதுச்சேரி அரசில் அரசாணை வெளியிடப்படவில்லை. இதற்கு திமுக, காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தான் காரணம். எனவே முதலமைச்சர் ரங்கசாமி இதன் உண்மை தன்மையை அறிந்து சக்கிளியர் ஜாதிக்கு பெயர் மாற்றி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கூறினார். பேட்டியின் போது மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன் உள்ளார்.