ஆல்பி ஜான் வர்கீஸ்  பொதுமக்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து கருத்துக்களை வழங்கினார் :

Loading

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், பாண்டேஸ்வரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொது மக்களோடு கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து கருத்துக்களை வழங்கி பேசினார்.
இந்த கிராம சபை கூட்டம் முக்கியமாக உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து திட்டங்களையும் மிகச் சிறப்பாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தெரிந்துகொள்ளும் வகையில் விளக்கபபட்டது. பொதுமக்களும் இதனை கவனமுடன் கேட்டு, உங்களுடைய பல்வேறு கருத்துக்களையும், கோரிக்கைகளையும் சொல்லியுள்ளீர்கள்.  மின்சாரம்  விநியோகிப்பதில் சில பிரச்சனைகள் உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். அதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதில் விவசாயத்திற்கான இணைப்பு குறித்து ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பேருந்து வழித்தடம் குறித்து பிரச்சனை உள்ளதாக ஊராடசி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்கள். இது ஒரு சவாலான பிரச்சனையாக தான் உள்ளது. இருப்பினும்  உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்களுக்கு ஒரு பிரச்சனை உள்ளதாக தெரிவித்துள்ளீர்கள். அதற்கும் போக்குவரத்து கழகத்திற்கு உடனடியாக தேவையான அறிவுரைகள் வழங்கப்படும் என்ற விவரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைக்கு வருகை தந்திருக்கும் மக்கள் அனைவரிடமும் கேட்கக்கூடிய ஒன்று நாம் பயன்படுத்திய பிளாஸ்டிக்கை சாலையில் தூக்கி வீசக்கூடிய பிரச்சனையும் உள்ளது. அதனை முன்னெடுப்பு பணியாக மேற்கொண்டு சரி செய்ய வேண்டும். இந்த பாண்டேஷ்வரம் சென்னைக்கு அருகில் உள்ள ஒரு ஊராட்சி மட்டுமின்றி, அதிகளிவல் தனி வீடுகள் கொண்ட ஒரு ஊராட்சியாகும். அதனால் அதனை சரி செய்வதற்காக ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.
அடுத்த வருடம் இந்த ஊராட்சியில் கட்டாயமாக குறைந்தது ரூ.50 இலட்சம் மதிபபீட்டில் வளர்ச்சி பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாதர்ஷ் கிராம யோஜனாவிற்கும் இந்த ஊராட்சி தெரிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கும் ரூ.15 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரையிலான மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடைபெறவுள்ளது என்று கூறினார்.அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பாக நடைபெற்ற கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, அக்கண்காட்சியில் உள்ள உணவுப் பொருள்களை சாப்பிட்டார்.
இக்கிராம சபை கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி),திட்ட அலுவலர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் செ.ஆ.ரிஷப்,ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரூபேஷ்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெட்ரிக் அருண்குமார், வெங்கடேஷன், ஆவடி வட்டாட்சியர் வெங்கடேஷன், பாண்டேஷ்வரம் ஊராட்சிமன்ற தலைவர் ரேகா ராமு, பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *