ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் 56ஆம் ஆண்டு அன்னதான விழா.

Loading

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் ரத்தினகிரி அடுத்த கீழ்மின்னல் அருள்மிகுபாலமுருகன்திருக்கோயிலில் 56 ஆம் ஆண்டு அன்னதான விழாவை ஶ்ரீபாலமுருகன் அடிமை சுவாமிகள் நேற்று தொடங்கி வைத்தார்.56ஆம்ஆண்டுஅன்னதான விழாவை முன்னிட்டு தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்றதை முன்னிட்டு ரத்தனகிரி கீழ்மின்னல் அருள்மிகு பாலமுருகன் திருக்கோயிலில் காலை6மணிக்குமூலமூர்த்திகளுக்கு சிறப்புஅபிஷேகம்மற்றும்அலங்காரம் நடந்தது. இதைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் 10 மணி வரை நாதஸ்வர குழுவினரின் நாக சங்கமம் மற்றும் காலை 10:30 மணிக்கு மகாதேவ ஆராதனையும், காலை 10:45 மணிக்கு திருப்பணி விழாவும் வெகு விமரிசையாக நடந்தது.செந்தில் தலைமையில் தேவாரம், திருப்புகழ், நாமாவளி, பக்தி பாடல்கள் நிகழ்த்தப்பட்டது. முற்பகல் 11 மணியளவில் மலையடி வாரத்தில்அன்னதானத்தைதவத் திரு. பாலமுருகன் அடிமைசுவாமிகள் முன்னிலையில்,விழுப்புரம்மாவட்டம், மயிலம், பொம்மபுர ஆதீனம் குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீசிவஞான பாலையசுவாமிகள்அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த அன்னதான விழாவில் கலவை மௌனகுரு சச்சிதானந்த சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அன்னதான விழாவில்உபயதாரர்கள் மற்றும் மெய்ஞான விழாஅன்னதான குழுவினர் மற்றும் ரத்தினகிரி கிராம பொதுமக்கள், ரத்தினகிரி பகீரதன் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளிபணியாளர்கள், பாலமுருகன் திருக்கோவில் பணியாளர்கள், பொதுமக்கள், பக்த கோடிகள் என திரளானோர் கலந்து கொண்டுசிறப்பித்தனர்.அன்னதானத்திற்கானஅனைத்துஏற்பாடுகளையும் பாலமுருகன் அடிமை சுவாமிகள் சிறப்பாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *