மகாபலிபுரத்தில் எஃப்சி மெட்ராஸ் தொடங்கும் கால்பந்து அகாடமி 

Loading

மகாபலிபுரத்தில் எஃப்சி மெட்ராஸ் தொடங்கும் உலகத்தரத்திலான தங்கும் வசதியுடன் கூடிய கால்பந்து அகாடமி கால்பந்தாட்டம், கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முழுமையான கல்வித் திட்டத்திற்கு திறன்மிக்க கால்பந்தாட்ட வீரர்களுக்கு முழு ஸ்காலர்ஷிப்பை ஃபுட்பால் அகாடமி வழங்குகிறதுஇது குறித்து  எஃப்சி மெட்ராஸ் நிறுவனர்கிரிஷ் மாத்ருபூதம், பேசுகையில், “மெட்ராஸிலிருந்து அடுத்த மெஸ்ஸியை கண்டறிவதே எமது கனவு. நமது நாட்டில் வெற்றிக்கனியைப் பெறுவதற்கு அனைத்து தகுதியும் உள்ள மிகத்திறமையான இளம் விளையாட்டு வீரர்கள் இருக்கின்றனர். எனினும், அவர்களுக்குள்ளே மறைந்திருக்கும் உண்மையான ஆற்றலை வெளிக்கொணர்வதற்கு உகந்த உட்கட்டமைப்பு வசதி, சூழல் மற்றும் வாய்ப்பு தேவைப்படுகிறது. விளையாட்டுகளிலும் மற்றும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதிலும், அரசும் மற்றும் தனியார் துறையின் பெருநிறுவனங்களும் பெரிய அளவில் ஆர்வம் கொண்டிருப்பதைக் காண்பது ஊக்கமளிக்கிறது. இந்த புதிய எஃப்சி மெட்ராஸ் வளாகத்தை நேர்த்தியாக உருவாக்கி இப்போது அதனை திறந்திருப்பதன் மூலம் இதுபோன்ற அகாடமிகளை உருவாக்க பிற பிசினஸ் நிறுவனங்களுக்கும் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கும் உத்வேகம் அளிப்பதற்கு ஒரு முன்னேற்ற நடவடிக்கையை நாங்கள் எடுத்திருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில், பெரும் சாதனைகளை நிகழ்த்தும் நமது எதிர்கால சேம்பியன்களுக்கு இத்தகைய அகாடமிகள் அவசியமாக இருக்கின்றன.” என்று கூறினார். ஹோம் ஆஃப் எஃப்சி மெட்ராஸ்” என்ற இவ்வளாகம், உருவாக்கப்பட்டிருக்கிறது. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இவ்வளாகத்தில் இரவு நேரத்திலும் ஜொலிக்கும் ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் விளையாடுவதற்கான கால்பந்தாட்ட மைதானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *