பெண் சாதனையாளர்களின் கண்காட்சி

Loading

ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பெண் சாதனையாளர்களின் கண்காட்சிமல்லுப்பட்டி, பாலக்கோடு மார்ச் 2023  ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பெண் சாதனையாளர்களின் கண்காட்சி உயிர்த் தொழில்நுட்பவியல் மற்றும் நுண்ணுயிரிகள் துறை சார்பாக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நுண்ணுயிரியல் துறையின் துறைத்தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், முனைவர். சக்தி அனைவரையும் வரவேற்று பேசினார். கண்காட்சியின் தலைமை உரையாக கல்லூரியின் தாளாளர் ஸ்ரீ மூகாம்பிகை கோவிந்தராஜ் ஜி அவர்கள் உலகில் உள்ள பல்துறை சார்ந்த சாதனைப் பெண்களைப் பற்றி நீங்கள் சிறப்பாக அறிந்துள்ளீர்கள் என்பதை இதன் மூலம் உணர்ந்துக் கொண்டேன். இது போன்ற பல்துறைச் சாதனையாளர்களாக கல்லூரியில் பயின்று முடித்து உலக அளவில் சிறந்த சாதனையாளராக முன்னேறி உங்கள் பெற்றோர்களையும் கல்லூரியின் பெருமைகளையும் இந்திய நாட்டிற்கு பெருமைப்பட வேண்டும் என அனைத்து மாணவிகளையும் வாழ்த்தி தலைமை உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் வாழ்த்துறையாக கல்லூரியின் முதல்வர், முனைவர். த.இரகுநாதன் அவர்கள் சாதனைப் பெண்களின் வாழ்க்கையை உணர்ந்த நீங்கள் இந்த துறையின் மூலம் பல்வேறு சாதனைகளை உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தினந்தோறும் வளர வேண்டும் என்பதே எனது குறிக்கோள், இதனை நீங்கள் அனைவரும் நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன் என்று வாழ்த்திக் கூறினார். கல்லூரியின் இணை ஒருங்கிணைப்பாளர் திரு. தனபால் அவர்கள் வளர்ந்து வரும் காலச் சூழலில் இந்த தலைமுறையினருக்கும் சாதனைப் பெண்களின் வரலாற்று சுவடுகளை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என்பதை அறிந்து நான் பெருமைப்படுகிறேன். நீங்களும் பல்துறை நோக்கில் பெரும் சாதனையாளராக உயர வேண்டுமென அனைவரையும் வாழ்த்திக் கூறினார். நிகழ்ச்சியின் நிறைவாக உயிர்த்தொழில் நுட்பவியல் பேராசிரியர், முனைவர். ஹரிசங்கர் அனைவருக்கும் நன்றி கூறினார். கண்காட்சியில் கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அனைத்து துறை சார்ந்த மாணவிகள் கண்காட்சியில் திரளாக் கலந்து கொண்டு சாதனைப் பெண்களின் விழிப்புணர்வுகளை உணர்ந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்நிகழ்வை உயிர்த்தொழில் நுட்பவியல் மற்றும் நுண்ணுயிரியல் துறையின் பேராசிரியர்கள், மாணவிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *