கலைக் கண்காட்சியான உமன் பவர் சீசன் நான்கை கலைஞர் அனுராதா துவக்கி வைத்து
டெசின் அகாடமி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், டெசின் அகாடமியின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்களின் குழு கலைக் கண்காட்சியான உமன் பவர் சீசன் நான்கை கலைஞர் அனுராதா துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்*சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஐ ஓ ஏ காம்ப்ளக்ஸில் டெசின் அகாடமி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், டெசின் அகாடமியின் மேலாளர்கள் மற்றும் ஊழியர்களின் குழு கலைக் கண்காட்சியான உமன் பவர் சீசன் 4 சிறப்பாக நடைபெற்றது, இந்த ஓவிய கலை கண்காட்சியை நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் சுதா ராஜேந்திரன் முன்னிலையில், கலைஞர் அனுராதா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார், இந்த கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவர் மாணவிகள் இலவசமாக பார்ப்பதற்கான அனுமதியானது வழங்கப்பட்டிருக்கிறது….இந்த ஓவிய கண்காட்சியின் நோக்கம் ஓவியம் வரைதலை ஊக்குவிப்பதும், ஒருவருடைய தனித் திறமையை வெளிக் கொண்டு தூண்டுவதற்காகவும், சமூகத்தில் பார்த்துக் கொண்டிருக்கும், மனதில் பதியும் நல்ல நிகழ்வுகளை ஓவியத்தின் மூலம் வெளிக்கொண்டு வருவதற்காக இந்த கண்காட்சியானது நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியில் இருபது பெண் கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி 9 மார்ச் 2023 முதல் மார்ச் 13, 2023 வரை நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.