பெண்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கும் “வாழ்ந்து காட்டுவோம்
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 3,10,909 பெண்களின் வாழ்க்கையில்மாற்றத்தை உருவாக்கும் “வாழ்ந்து காட்டுவோம் (VKP) நிர்வாகிகள் மகளிர் தினம் கொண்டாடினர் தமிழ்நாட்டின்கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு திறனதிகாரம் அளித்து அவர்களின் வாழ்க்கையில்மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கான தனது செயல்பாட்டின் சாதனைகளை வாழ்ந்து காட்டுவோம்செயல்திட்டம் (VKP) பெருமையுடன் கொண்டாடுகிறது. 2017-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்துதொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதன் வழியாக சுயசார்பும், சுயநிறைவும் உள்ளசமூகங்களைஉருவாக்குவதில்VKPதன்னைஅர்ப்பணித்துக்கொண்டிருக்கிறது;தமிழ்நாட்டின்கிராமப்பகுதிகளில் பெண்களின் வாழ்க்கையில் இது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து தலைமை செயல் அலுவலர் .S. திவ்யதர்ஷினி ஐஎஎஸ், பேசுகையில், “இப்பெண்களுக்குத்தேவைப்படுகின்ற ஆதரவு அடிப்படை அளவிலிருந்து தொடங்குவதாகவும், தொடர்ச்சியானதாகவும்,தனிப்பட்டதாகவும் மற்றும் முழுமையானதாகவும் இருப்பது அவசியம். இலட்சக்கணக்கான பெண்களின்விருப்பங்களும், ஆர்வங்களும் மாறுபட்டவையாக இருப்பதால் ஒற்றை அணுகுமுறை இவர்கள்அனைவருக்கும் பயனளிக்குமாறு செயல்படாது என்பதை தொடக்கத்திலிருந்தே நாங்கள் நன்குபுரிந்துகொண்டிருக்கிறோம்.இப்பெண்கள்மற்றும்அவர்களதுபோலவேஎமதுசெயல்உத்திகளும்பன்முகத்தன்மை கொண்டதாக பல்வேறு தொடுமுனை அம்சங்களுடன் இருப்பது தேவைப்படுகிறது.” என்றுகூறினார்..