அறுவை சிகிச்சை 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது
பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ஃபோர்டிஸ் வடபழனியில் ஆழ்ந்த மூளை தூண்டுதலுக்குப் பிறகு புதிய வாழ்க்கையைப் பெற்றார் அறுவை சிகிச்சை 10 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததுபுதிதாக நிறுவப்பட்ட விரிவான பார்கின்சன் நோய் மற்றும் ஆழமான மூளை தூண்டுதல் மையம், மருந்துகளுக்குகட்டுப்படாததீவிரபார்கின்சன்நோயால்பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வடபழனி, ஃபோர்டிஸ் மருத்துவமனையின் பார்கின்ஸன் நோய் மற்றும் டிபிஎஸ் நிபுணர் டாக்டர் விகாஷ் அகர்வால் பேசுகையில்,கடுமையான பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், உடல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிக அளவு மருந்துகளை உட்கொள்பவர்களுக்கும் டிபிஎஸ் ஒரு வரப்பிரசாதம். அறுபது வயது நிறைந்த இந்நோயாளி, தீவிர பார்கின்சன் நோயின் மருந்து எதிர்ப்பு வடிவமான ஆஃப் டிஸ்டோனியா நிலையில் எங்களைப் பார்க்க வந்தார்.எங்கள் மருத்துவ நிபுணர்கள்குழு 10 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்து மூளையில் மின்முனைகளை பொருத்தினோம். முதல் சவால் என்னவென்றால், எந்தவொரு வயதானவர்களுக்கே உரித்தான சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற இதர நோய்கள் ஆகும். கூடுதலாக, உடலில் உள் உடல் உறுப்புகள் அல்லாத எந்த வகையான வெளிப்புற கருவிகள் வைக்கும்போது இரத்தப்போக்கு மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும்,இவை இரண்டும் பக்கவாதத்தில் முடிவடையும். என்றார்