ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

Loading

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட சதுரங்க பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கலியுகத்திலே இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் சிவபெருமானை முனீஸ்வரராக வழிபாடு செய்து வருகின்றனர். தொண்டை வளநாட்டில் திருவெம்பாக்கம் பூண்டி திருத்தளத்திற்கு அருகில் சதுரங்கப்பேட்டை கிராமத்தில் பல காலமாக வெட்டவெளியில் மண்ணால் முனீஸ்வரராக குலதெய்வ வழிபாடு நடைபெற்று வந்தது தற்போது முனீஸ்வரருக்கு ஆலயம் கோபுரம் அமைத்து புதிதாக முனீஸ்வரர் திருவுருவ சிலை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது முன்னதாக நேற்று காலை 11 மணிக்கு கணபதி பூஜை கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் லட்சுமி ஹோமம் புதிய சிலை சயனாதி வாசம், முதல் கால யாக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கால யாக பூஜை, மூல மந்திர ஹோமம் தீபாராதனையுடன் கோபுர உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு ஸ்ரீ முனீஸ்வரருக்கு  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் பூண்டி, நெய்வேலி, மோவூர், திருவள்ளூர், புல்லரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்து முனீஸ்வரனை வழிபட்டு சென்றனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *