முதன் முறையாக தனது பொது பங்கு வெளியீட்டை ஐபிஓ

Loading

முதன் முறையாக தனது பொது பங்கு வெளியீட்டை ஐபிஓ மேற்கொள்ளும் வெர்டெக்ஸ்பிளஸ் டெக்னாலஜிஸ்!தேசிய பங்குச் சந்தையின் எமெர்ஜ் தளத்தில் இது பட்டியலிடப்படும் 3.மார்ச் 2023: ஜெய்ப்பூரை அடித்தளமாக கொண்டு இயங்கி வரும் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான வெர்டெக்ஸ்பிளஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட், ரூ.10 என்ற முகமதிப்பைக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பங்கையும் ₹91-96 என்ற விலை வரம்பில், 14,79,600 பங்குகளைக் கொண்ட தனது முதல் பொதுப்பங்கு வெளியீடு நிகழவிருப்பதை அறிவித்திருக்கிறது. ஆலோசனை வழங்கல், அவுட்சோர்சிங், உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. மொத்தமுள்ள 14,79,600 பங்குகளில் 7,02,000 பங்குகள் QIB கோட்டாவிற்கு (ஆங்க்கர் ஒதுக்கீடு உட்பட) ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. HNI பங்கிற்கு 2,11,200 பங்குகளும் மற்றும் ரீடெய்ல் பங்கிற்கு 4,92,000 பங்குகளும் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ரீடெய்ல் பங்கில் 74,400 பங்குகள் சந்தை உருவாக்குனர் கோட்டாவின்கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த பல நிதி ஆண்டுகள் காலஅளவில் தொடர்ந்து நிலையான வளர்ச்சியினை வெர்டெக்ஸ்பிளஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் பதிவு செய்திருக்கிறது. இயக்க செயல்பாடுகளிலிருந்து கிடைத்த இதன் வருவாய், நிதியாண்டு 21-ல் ₹196.4 மில்லியனாகவும் மற்றும் நிதியாண்டு 22-ல் ₹208.6 மில்லியனாகவும் இருந்தது. இதுவே நிதியாண்டு 23-ன் முதல் அரையாண்டு காலஅளவின்போது ₹105.5 மில்லியனாக பதிவாகியிருக்கிறது. நிதியாண்டு 22-ல் இந்நிறுவனத்தின் EBITDA, ₹32 மில்லியன் என்ற அளவில் இருந்தது. நிதியாண்டு 21-ல் இது ₹21 மில்லியனாக பதிவாகி இருந்தது. நிதியாண்டு 23-ன் முதல் அரையாண்டு காலஅளவில் இதன் EBITDA ₹17 மில்லியன் என பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது..
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *